சவூதி அரேபியாவின் ரியாத் விமான நிலையம் மீது தாக்குதல் ! விமானி உட்பட மூவர் பலி!

சவூதி அரேபியாவின் ரியாத் விமான நிலையம் மீது தாக்குதல் ! விமானி உட்பட மூவர் பலி!

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் (King Khalid International Airport) மீது யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில்,

விமானி ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். விமான நிலையக் கட்டமைப்புக்களில் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைத்ததைத் தொடர்ந்து,

விமான நிலையம் தற்போது மீண்டும் திறக்கப்பட்டு வான்வழிப் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளதாகச் சவூதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை (GACA) இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் விமான நிலைய வளாகமும், சவூதி அரேபியாவின் தேசிய விமானச் சேவையான ‘சவூதியா’ (Saudia) நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் வானூர்தி ஒன்றும் சேதமடைந்தன.

இச்சம்பவத்தில் அந்நிறுவனத்தின் விமானியான கப்டன் ஹமூத் அலி அல்கல்தாமி (Hamoud Ali Alkalthami) உயிரிழந்ததாகச் சவூதியா நிறுவனம் ஆழ்ந்த துயரத்துடன் உறுதிப்படுத்தியுள்ளது.

அண்மைய நாட்களில் ரியாத் மட்டுமன்றி, யேமன் எல்லைக்கு அருகிலுள்ள அப்ஹா (Abha), ஜசான் (Jazan) மற்றும் நஜ்ரான் (Najran) ஆகிய நகரங்களின் விமான நிலையங்களையும் இலக்கு வைத்து ஹூதிகள் தொடர்ச்சியான தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர்.

மக்கா, மதீனா ஆகிய புனித நகரங்களின் வான்பரப்பைத் தவிர்த்து, சவூதி வான்வழியைப் பயன்படுத்தும் எந்தவொரு வானூர்தியும் தங்களின் தாக்குதல் இலக்குகளே என எச்சரித்துள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள்,

ரியாத் மீதான பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் திட்டமிட்ட இலக்கை வெற்றிகரமாகத் தாக்கியதாக உரிமை கோரியுள்ளனர்.

செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பாப் அல்-மந்தேப் (Bab al-Mandeb) நீரிணையை அண்டிய பகுதிகளை

ஹூதிகள் அண்மையில் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ரியாத்தின் ஆதரவு பெற்ற யேமன் அரச படைகள் அப்பிராந்தியத்தில் தீவிர எதிர்த்தாக்குதல்களை முன்னெடுத்து வரும்

சூழலிலேயே சவூதி மீதான இந்த வான்வழித் தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. பிராந்திய ரீதியாகப் பதற்றங்கள் வலுத்துவரும் நிலையில், சவூதி அரேபியாவுடன் செய்துகொண்ட பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில்

பாகிஸ்தான் கணிசமான இராணுவப் படைகளையும் தளபாடங்களையும் ரியாத்தில் குவித்துள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

சவூதியின் நிலப்பரப்புப் பாதுகாப்பிற்காகவே இப்படையினர் நிலைகொண்டுள்ளதாகவும், எல்லை தாண்டிய தாக்குதல்களில் அவர்கள் ஈடுபட மாட்டார்கள் எனவும் பாகிஸ்தான் தெளிவுபடுத்தியுள்ளது.

இதனிடையே, பிராந்தியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கிய ஹூதிகளின் மூன்று ஏவுகணை ஏவுதளங்களைத் தரைமட்டமாக்கியுள்ளதாகச் சவூதி தலைமையிலான கூட்டுப் படைகள் அறிவித்துள்ளன.

பொதுமக்கள் மற்றும் குடியியல் கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களுக்குத் தயவுதாட்சண்யமின்றித் தக்க பதிலடி வழங்கப்படும் என எச்சரித்துள்ள

கூட்டுப் படைகளின் பேச்சாளர் கேர்ணல் துர்க்கி அல்-மாலிகி (Turki al-Maliki), ரியாத் மற்றும் கமிஸ் முஷைத் ஆகிய பகுதிகளை நோக்கி ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை நடுவானில்

இடைமறித்து அழித்துள்ளதாகவும், தையிஸ் (Taiz) உள்ளிட்ட முன்னரங்குகளில் ஹூதிகளுக்கு எதிராக 97 துல்லியமான வான்வழித் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin