நவநீதம் பிள்ளை 2026-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ளார்.
அபார்தீட் (Apartheid) இனவெறிக்கு எதிராகப் போராடியவரும்,
காஸாவில் நடைபெறும் இனப்படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுத்தவருமான
தென்னாப்பிரிக்காவின் பிரபல சட்ட வல்லுநரும் நீதிபதியுமான நவநீதம் பிள்ளை 2026-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ளார்.
சர்வதேச நீதிமன்ற நீதிபதியாகச் பணியாற்றிய நவி பிள்ளையை, “சர்வதேச சட்டக் கொள்கைகளின் மிகச்சிறந்த காவலர்களில் ஒருவர்” என்று நோபல் கமிட்டி வெகுவாகப் பாராட்டியுள்ளது.
சர்வதேச நீதி மற்றும் மனித உரிமைகளுக்காகத் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துச் செயலாற்றியமைக்காக
அவருக்கு இந்த உயரிய நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.

