கிளிநொச்சியில் கடத்தப்பட்ட நபர் பொலிஸில் தஞ்சம்!

கிளிநொச்சியில் கடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளான நிலையில் 24 நாட்களின் பின் பொலிசாரிடம் சரணடைந்த நபரால் கிளிநொச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2ம் திகதி கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சிங்கராஜன் ஜெயக்குமார் என்பவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த... Read more »

யாழில் மான் கொம்புடன் ஒருவர் கைது!

கிளிநொச்சியில் இருந்து பேருந்தில் யாழ்ப்பாணத்திற்கு மான் கொம்பை கொண்டு வந்தவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸாரால் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது இன்று (2024.05.24) இடம்பெற்றுள்ளதுடன் இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை... Read more »
Ad Widget

அக்காவின் காதலனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான சிறுமி

கிளிநொச்சியில் 14 வயது சிறுமியொருவர் அக்காவின் காதலனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து கிளிநொச்சி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே மேற்படி விடயம் தெரியவந்துள்ளது. கிளிநொச்சி... Read more »

கிளிநொச்சி சந்திரன் பூங்காவை ஆக்கிரமித்த இலங்கை இராணுவம்: கெடுபிடிகளுக்கு மத்தியில் போராட்டம்

கிளிநொச்சி – சந்திரன் பூங்காவை இராணுவம் வெளியேறுமாறு கோரி தமிழ் தேசய மக்கள் முன்னணியினர் பாதுகாப்பு படையினரது கெடுபிடிகளுக்கு மத்தியில் இன்று செவ்வாய்கிழமை(21) போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி மண்ணின் சொத்தான சந்திரன் பூங்காவை இலங்கை இராணுவத்தினர் ஆக்கிரமித்து முகாமிட்டுள்ளனர். எனவே பூங்கைவை விட்டு இராணுவத்தினர்... Read more »

இறுதியுத்த துயரங்களை சுமந்து சென்ற ஊர்தியை மறித்த பொலிஸார்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி இலங்கை பொலிஸாரால் மறிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் சென்ற போதே பொலிஸாரால் மறிக்கப்பட்டு தேவையற்ற வகையிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி இறுதி யுத்தத்தில் மக்கள்பட்ட துன்பங்களை காட்சிப்படுத்தும் வகையிலான... Read more »

கிளிநொச்சியில் சிரட்டையில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை பருகிய இராணுவம்

கிளிநொச்சியில், இலங்கை இராணுவத்தினருக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில், பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. வீதியில் பயணித்த பொது மக்களுக்கு மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. இதன்போதே, வீதியில் பயணித்த இராணுவத்தினரும் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை சிரட்டையில்... Read more »

கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சியின் மே தினம் எழுச்சி பேரணி

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசிய மே தின ஊர்வலமும், மேடை நிகழ்வும் இன்று புதன்கிழமை பிற்பகல் கிளிநொச்சியில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட தொழிற்ச்சங்கங்களுடன் இணைந்து தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளை ஏற்பாடு செய்த மே தினம் மக்களின் எழுச்சி பேரணியோடு நடைபெற்றது. மே தின... Read more »

முகமாலையில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள்

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் மனித எச்சங்களும் சீருடை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உள்நாட்டுப் போரின் போது புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த குழுவினரால் கடந்த 25ஆம் திகதி இந்த மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அதிகாரிகள் சம்பந்தப்பட்ட... Read more »

மக்களால் துரத்தப்பப்பட்ட அமைச்சர் டக்ளஸ்

கிளிநொச்சி பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களின் எதிர்ப்பால் அங்கிருந்து அவசர அவசரமாக உந்துருளியில் ஏறி தப்பிசெபெற்றுள்ளார். கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னாவெளி பகுதியில் சீமெந்து தொழிற்சாலைக்கான சுன்னக்கற்களை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு... Read more »

இலங்கையில் கண்டுப்பிடிக்கப்பட்டதா இராவணன் பயன்படுத்திய பொருட்கள்?

கிளிநொச்சி மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்னர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் இராவணன் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக புகைப்படங்களுடன் செய்தியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. இந்த செய்தி தொடர்பில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் செய்தி சரிபார்ப்பு தளத்தால் (factseeker) ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறித்த புகைப்படங்கள் போலியானவையாக... Read more »