மன்னார் – நானாட்டான் மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி வட மாகாண ஆளுநரிடம் இன்று மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
மன்னார் – நானாட்டான் மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி கால்நடை வளப்பாளர்கள் வட மாகாண ஆளுநர் நாகலிங்கன் வேதநாயத்திடம் மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.
இன்று காலை கால்நடை வளர்பபாளர்கள் சங்கத்தின் தலைவர், கால்நடை வளர்ப்பாளர்கள், மெசிடோ அமைப்பின் இணைப்பாளர், உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் மகஜர் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்பாளர்களுக்கு என ஒதுக்கப்பட்ட கட்டுக்கரை குளம் புல்லறுத்தான் கண்டல் பகுதி மேய்ச்சல் தரையில்,
சிலர் அடாத்தாக விவசாய செய்கையில் ஈடுபட்டு வருவதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பில் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.