போதைவஸ்து பாவித்ததன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஒருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் இந்த மரணம் தொடர்பில்... Read more »
அச்சுவேலியில் இன்று காலை இனந்தெரியாத கும்பலொன்று நடத்திய தாக்குதலில் கடை உரிமையாளர் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார். இன்று அதிகாலை 6.15 மணியளவில் அச்சுவேலி வைத்தியசாலை வீதியூடாக தனது கடையினைத் திறப்பதற்கு சென்ற வேளை இடைவழியில் மறித்த இனத்தெரியாத கும்பல் கடை உரிமையாளர் மீது கடுமையாக... Read more »
“வாக்கு வேட்டைக்காக வடக்கிலுள்ள சில தமிழ் அரசியல்வாதிகளும் ராஜபக்சக்களின் சகோதரர்களாக மாறி இனவாதத்தை கையிலெடுத்துள்ளனர்.” – என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். வடக்கிலும், தெற்கிலும் மக்களை பிரித்தாளும் இனவாதத்தை தோற்கடித்து, முன்னோக்கி செல்ல தேசிய மக்கள்... Read more »
யாழ்ப்பாணம் (Jaffna) கோண்டாவில் வீதியால் பயணித்த முதியவர் ஒருவர் திடீரென வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நாராயணன் வீதி, கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி கலியுகவரதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் வறுமை காரணமாக... Read more »
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்று 01.05.2025 இரவு 9 .40 மணியளவில் கொழும்பில் பூரணம் அடைந்தார் (இறையடி சேர்ந்தார்.) இலங்கை தலைநகர்கொழும்பில் வைத்திய சிகிச்சைபெறவந்திருந்த அவர், கொழும்பு வெள்ளவத்தை கம்பன் கழகத்தில் தங்கி இருந்த... Read more »
யாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்து ஒரு தொகுதி காணிகள் இன்று (01) உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மானத ஜெகம்பத் யாழ். மாவட்ட செயலர் ம.பிரதீபனிடம் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள், செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.... Read more »
தமிழகம் நாகப்பட்டினம் மற்றும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு இடையிலான கப்பல் சேவை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவையை முன்னெடுத்துள்ள சுபம் நிறுவனத்தின் தலைவர் சுந்தர்ராஜன் இதனை தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.... Read more »
காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை உள்வாங்கிப் பயணித்தால்தான் முன்னோக்கிச் செல்ல முடியும் என்பதை கூட்டுறவுத்துறையினர் உணர்ந்துகொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார். மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியீட்டத்தின் கீழ் வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தால் அமைக்கப்பட்ட கொடிகாமம் பனை தென்னை... Read more »
35 வருடங்களின் பின்னராக காங்கேசன்துறை பலாலி இடையிலான அரச பேருந்து சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. யுத்தம் காரணமாக கடந்த 35 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட குறித்த பகுதியூடாக பொதுமக்கள் நடமாட முடியாத சூழல் காணப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை... Read more »
இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை முறையிடுவதற்கு “உள்ளக அலுவல்கள் அலகு” எனும் பிரிவானது நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ் . மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனால் மாவட்டச் செயலகத்தில் திறந்துவைக்கப்பட்டது. இவ் அலகினை திறந்துவைத்து பின் மாவட்ட செயலர் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி... Read more »

