சுமந்திரனுக்கு மாஸ்டர் நான் தான் என நிரூபித்த சிவஞானம்..!
வலி கிழக்கு பிரதேச சபையின் ஆட்சி அதிகாரம் திட்டமிட்ட சூழ்ச்சியால் தமிழரசு கட்சியிடம் இருந்து மறைக்கப்பட்டமையே உண்மையான விடயம்.
தமிழரசு கட்சியின் ஆட்சியை இழந்தது அங்கு இடம் பெற்ற சூழ்ச்சி என்ன என்பது தொடர்பில் விரிவாக பார்ப்போம்.
நேற்று புதன் கிழமை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடை பெற்றது.
36 உறுப்பினர்களை கொண்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக் காக நடைபெற்று முடிந்த உள்ளூ ராட்சி சபைத் தேர்தலில்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி 11 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 9 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி ஆகியன தலா 5 ஆசனங்களையும், தமிழ் மக் கள் கூட்டணி மற்றும் சுயேச்சை குழு இல-01 ஆகியன தலா இரண்டு ஆச னங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் சுயேச்சை குழு இல-02 ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தது.
தவிசாளர் பதவிக்கான போட்டியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் செல்வத்திசைநாயகம் தவநாயகமும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி சார்பில் தியாகராஜா நிரோசும், தேசிய மக்கள் சக்தி சார்பில் சிவசுப்பிர மணியம் சுகிர்தரூபனும் முன்மொழி யப்பட்டனர்.
பிரச்சனை ஒரு கிழமைக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டது சுமந்திரனுக்கும் சிவஞானத்தாருக்கும் .
வலி கிழக்கு பிரதேச சபையை யாருக்கும் தரமாட்டோம் தமிழரசு கட்சிக்கு தான் என ஏற்கனவே இடம் பெற்ற ஊடக சந்திப்புக்களில் சிவஞானத்தார் தெளிவாக கூறிவிட்டார் .
அதற்கு அவர் கட்சி மீது கொண்ட பாசம் அல்ல அவர் தன்னுடைய வலி கிழக்கு பிரதேச சபை தேர்தலில் வெற்றி பெற்ற தனது பொறாமகன் ஜோகேஸ்வரன் மீது கொண்ட அளவற்ற அன்பு தான் என சுமந்திரனுக்கு தெரியாது.
யோகேஸ்வரனை தவிசாளர் ஆக்குவதற்கு சிவஞானம் முன்மொழிந்த நிலையில் சுமந்திரன் அதனை மறுத்துவிட்டதாகவும் நான் சொல்வதை நீங்கள் செய்யுங்கள் மாஸ்டர் நான் தான் என சுமந்திரன் கூறியவை சிவஞானத்தாருக்கு தூக்கி வாரி போட்டது.
என்னதான் இருந்தாலும் அரசியலில் சிவஞானம் பழுத்த பழம் வெம்பல் பழம் எனக்கே வகுப் படுப்பதாய் என நினைத்து காய் நகர்த்த தொடங்கியது பழுத்த பழம் சிவஞானம்.
சுமந்திரன் வலி கிழக்கு பிரதேச சபைக்கு தவிசாளராக தவநாயகத்தை எல்லோரும் ஆதரிக்க வேண்டும் நேரடி வாக்குமூலமே தவிசாளர் தேர்வு இடம்பெற வேண்டும் எனவும் உத்தரவு உறுப்பினர்கள் ஒவ்வொருவருடைய தொலைபேசிக்கும் வழங்கப்பட்டது.
பழம் காத்திருந்தது தனது அரசியல் திருவிளையாட்டை அதிகாலை வேளை ஆரம்பித்தது.
தேசிய மக்கள் சக்திக்கு தூது விட்டது தமிழரசு கட்சியில் உள்ள சிலர் உங்களை ஆதரிப்பார்கள் மறைமுக வாக்கெடுப்புக்கு கேளுங்கள் என்றது.
விஷயத்தை சரி வர விளங்கிக் கொள்ளாத தேசிய மக்கள் சக்தியின் சிறுசுகள் தமது சார்பில் தவிசாளர் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு சம்மதித்தார்கள்.
நான் கொடுத்த தவிசாளரை போட மறுத்த சுமந்திரனை பழிவாங்கும் சந்தர்ப்பத்தை அரிய குட்டி பரஞ்சோதியுடன் இணைந்து வெற்றிகரமாக முடிப்பதற்கான பேச்சுக்கள் அன்று காலையில் முடிக்கப்பட்டது.
என்னடா நேற்று வந்த வக்கீல் சுமோ எனக்கே வாலாட்டுவதா நான் ஒன்றும் மாவை அல்ல புலிக்கே அல்வா கொடுத்தவன் என மனதுக்குள் தேற்றிய சிவஞானம் சரியான நேரத்தில் பதிலடி கொடுத்தார்.
நேரடியாக சபை அமர்வில் கலந்து கொண்ட சிவஞானம் நடக்கும் விடயங்களை ஆற அமர பார்த்துக் கொண்டிருந்த பின் தவிசாளர் நிரோஷ் வழங்கிய தேநீர் விருந்து உபசாரத்தையும் ஆற அமர பருகிவிட்டுச் சென்றார்.

