தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை..!
வெளிநாட்டில் தொழில் புரியும் ஊழியர்களின் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து மீளத்திரும்பிய வர்கள் புதிய தொழிலை தொடங்குவதற்கான / தொழிலை விருத்தி செய்வதற்கான தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சிப்பட்டறையின் ஆரம்ப நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (17.06.2025) காலை 9.00 மணிக்கு மாவட்ட முகாமைத்துவ திறன் விருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
இப் பயிற்சிப்பட்டறை ஆரம்ப நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மாவட் இணைப்பாளர் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்
( யாழ்ப்பாணம்) தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.


