வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் விபத்து..!
யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் இன்று பிற்பகல் 01.00 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பஸ்தரை அதிவேகமாக வந்த வாகனம் பின்னால் மோதியது
இதில் தூக்கி வீசப்பட்ட குடும்பஸ்தர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்
விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட வாகன சாரதியை மருதங்கேணி பொலிசார் வாகனத்துடன் கைது செய்துள்ளனர்
விபத்து குறித்து மருதங்கேணி போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

