முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வரப்பிரசாதங்கள் அவசியமா?

முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் தொடர்பிலான காரணிகளை ஆராய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மூலம் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழு தமக்கான வரப்பிரசாதங்கள் மற்றும் அவற்றுக்கான தேவை தொடர்பில் எழுத்து மூலம் அறியப்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அறிவித்துள்ளனர். அதன்படி,... Read more »

கிராண்ட்பாஸ் துப்பாக்கிப் பிரயோகம்: கொலையாளிகள் தப்பிச் சென்ற கார் கண்டுபிடிப்பு!

கொழும்பு கிராண்ட்பாஸ்பகுதியில் முச்சக்கரவண்டியில் சென்ற ஒருவரைச் சுட்டுக் கொல்வதற்காக கொலையாளிகள் பயன்படுத்திய கார் ஹங்வெல்ல அம்குகம பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இன்று (17) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று (17) அதிகாலை 4 மணியளவில் காரை எடுத்துக். கொண்டு விஹாரை ஒன்றின் வளாகத்துக்கு... Read more »
Ad Widget

வாடகைக்கு வீடுகளை வழங்குவது தொடர்பில் வெளியான அறிவுறுத்தல்!

வீடுகளை வாடகைக்கு விடும்போது மிகவும் கவனமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். வெளிநாட்டவர்களுக்கு வீடு வழங்குவதில் விசேட கவனம் செலுத்த வேண்டும். அந்த வெளிநாட்டினரின் செயற்பாடுகளை கண்டறிந்து அவர்களுக்கு வீடுகளை வழங்குவது மிகவும்... Read more »

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விவகாரம்: அரசாங்கத்திடம் ரவி குமுதேஷ் கோரிக்கை!

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையினை வெளியிடுவது ஜனாதிபதியின் பொறுப்பாகும்” என ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் ஊடகப்பேச்சாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” உயிர்த்த ஞாயிறு தாக்குதல்... Read more »

வேட்பு மனு நிராகரிப்பு; உயர் நீதிமன்றில் மனு!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக வன்னி மாவட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்டத்திற்கான ஜனநாயக தேசிய கூட்டமைப்பு சமர்ப்பித்த வேட்புமனுவை நிராகரித்து மாவட்ட தேர்தல் அதிகாரியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரியே இந்த மனு உயர்... Read more »

பல வைத்தியசாலைகளில் கதிரியக்க பரிசோதனைகள் முடக்கம்!

அரசாங்க வைத்தியசாலையில் காணப்படுகின்ற மருத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையால் இலங்கையில் 8 க்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளில் கதிரியக்க பரிசோதனை சேவைகள் தடைப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த அரசாங்கத்தில் துணை மருத்துவ சேவைக்கு தேவையான உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வது இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக CT... Read more »

முட்டை வர்த்தக சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

முட்டை விலையை நிர்ணயம் செய்ய விலை சூத்திரம் கொண்டு வர வேண்டும் என முட்டை வர்த்தக சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கு 25 ரூபாவிற்கும் குறைவாகவே செலவாகும் என்பதால் சந்தையில் ஒரு முட்டையை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும்... Read more »

மனித உரிமை மீறல்கள்: உள்ளக பொறிமுறை ஊடாகவே விசாரணை

நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு எதிராக உள்ளக பொறிமுறை ஊடாகவே சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மீள் நிகழாமையை உறுதிப்படுத்துவதற்காக தேசிய பொறிமுறைக்கு சர்வதேச மனித உரிமை பொறிமுறையின் ஆலோசனை பெறப்படக்கூடும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத்... Read more »

புதிய கடன்கள் எதனையும் அரசாங்கம் பெறவில்லை: ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்

அமைச்சுகளின் செலவினங்களைச் சமாளிக்கவும், திறைசேரி பத்திரங்கள் மற்றும் பிணைமுறைகளை மீளச் செலுத்துவதற்கும் உள்ளூர் நிதிச் சந்தையில் இருந்து நிதி சேகரிக்கப்படுகிறதே தவிர புதிய கடன்களை பெற மாட்டோம் என ஜனாதிபதியின் பொருளாதார மற்றும் நிதி விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதி... Read more »

அரச பங்களாக்கள்: மீள ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு

அரச பங்களாக்களை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் மீள ஒப்படைக்கவில்லையெனில், வழக்கு தொடரப்படும் என முன்னாள் அமைசர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிலருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சு அரச நிர்வாக உள்துறை மாகாண சபைகள் மற்றும் தொழில் அமைச்சு இந்த... Read more »