அரச பங்களாக்களை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் மீள ஒப்படைக்கவில்லையெனில், வழக்கு தொடரப்படும் என முன்னாள் அமைசர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிலருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சு அரச நிர்வாக உள்துறை மாகாண சபைகள் மற்றும் தொழில் அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
அரச பங்களாக்களை விரைவில் மீள ஒப்படைக்குமாறு பல தடவைகள் ஞாபகமூட்டப்பட்டாலும் 15ஆம் திகதி வரையில் சுமார் 11 பேர் மாத்திரமே அவற்றை மீள ஒப்படைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் அரச பங்களாக்களை மீள ஒப்படைப்பதில் பின்னடைவைக் காட்டி வருவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பு 7 பிரதேசத்தில் சுமார் 40 பங்களாக்கள் வழங்கப்பட்டிருந்தன. அவற்றுள் இன்னுமும் மீள ஒப்படைக்கப்படாத பங்களாக்களின் எண்ணிக்கை 29 ஆகும்.
இந்நிலையில், அமைச்சர்களுக்கு உத்தியோபூர்வ இல்லங்களை வழங்கும் போது அனைத்து காரணிகள் தொடர்பிலும் ஆராய்ந்து செலவுகள் குறையும் விதத்தில் புதிய வேலைத்திட்டத்தை செயற்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகிறது.