வீடுகளை வாடகைக்கு விடும்போது மிகவும் கவனமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டவர்களுக்கு வீடு வழங்குவதில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
அந்த வெளிநாட்டினரின் செயற்பாடுகளை கண்டறிந்து அவர்களுக்கு வீடுகளை வழங்குவது மிகவும் அவசியம்.
சுற்றுலா விசாவில் வரும் சில வெளிநாட்டவர்கள் நாட்டில் சட்டவிரோதமாக தங்கி ஒன்லைனில் சட்டவிரோதமாக பணம் சம்பாதிப்பதாக அவர் கூறினார்.
இவ்வாறான நபர்களுக்கு வீடுகளை வழங்குவதும் தவறு என மேலும் தெரிவிக்கப்பட்டது.