பேரணி அறிவித்தல் சுவரொட்டிகளை அகற்ற வேண்டாம்! பொலிஸாரிடம் லால்காந்த கோரிக்கை

தேர்தல் சட்டத்தின்படி பேரணிகளூடாக பிரசாரம் செய்வது சட்டவிரோதமானது அல்லவென தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளர் குழுத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். இதற்கு தேர்தல் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் எனவே இதுபோன்ற சுவரொட்டிகளை தொட வேண்டாமெனவும் பொலிஸ்... Read more »

நெல் கொள்வனவுக்கு 3,000 கோடி ரூபா அரசாங்கம் ஒதுக்கீடு

நெல் கொள்வனவுக்கு 3,000 கோடி ரூபா அரசாங்கம் ஒதுக்கீடு : 3 இலட்சம் மெ. தொன் நெல்லை கொள்வனவு செய்ய தீர்மானம் பெரும்போகத்தில் நெல் கொள்வனவுக்காக மூவாயிரம் கோடி ரூபாவை (30 பில்லியன்) ஒதுக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நெல் கொள்வனவுக்காக மூவாயிரம் கோடி ரூபாவை... Read more »
Ad Widget

15 தூதுவர்கள் உடனடியாக இலங்கைக்கு அழைப்பு!

ஐக்கிய இராச்சியத்துக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகமவின் வீட்டில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டினால் மீண்டும் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்ட ஜனாதிபதி, இந்த குற்றச்சாட்டுக்கள் ஐக்கிய இராச்சியத்தில் இலங்கையின் நற்பெயருக்குக்... Read more »

டயனாவை துரத்தும் குற்றச்சாட்டுக்கள் : மற்றொரு வழக்கும் விசாரணைக்கு வருகிறது!

இலங்கைப் பிரஜை அல்ல எனத் தெரிந்தும் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து இலங்கையில் தேசிய அடையாள அட்டையைப் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனகமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு... Read more »

குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை எதிர்கொள்ளத் தயார்! – மஹிந்த

அரசாங்கம் தமக்கான பாதுகாப்பை குறைத்தாலும் மக்களை பாதுகாப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். இதன்படி, தனது பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் தனது குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தினால், எந்தவொரு... Read more »

தேர்தலின் பின்னர் வெளிநாடு செல்லும் ரணில்: காரணம் வெளியானது!

எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஓய்வு எடுப்பதற்காக வெளிநாடு செல்லவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டுக்கு பதவி ஒன்றைப் பெறவா செல்கிறீர்களா என்று கேட்டதற்கு, அப்படி இல்லை என்றும் ஓய்வெடுக்க வெளிநாடு செல்கிறேன் என்றும் கூறினார். மேலும்... Read more »

ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது பொய்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தவறானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு பொய்யானது என சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்... Read more »

“பிரபஞ்ச நேசம்” இயற்கை நேய செயலணியின் செயலமர்வு யாழில்

காவேரி கலா மன்றத்தின் “பிரபஞ்ச நேசம்” இயற்கை நேய செயலணியின் நான்காவது செயலமர்வு இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த செயலமர்வில் காலநிலை மாற்றமும் உயிர்ப் பல்வகைமையும் என்ற தொனிப்பொருளில் கருத்துரைகள் வழங்கப்பட்டன. செயலமர்வின் வளவாளராக காவேரி கலா மன்றத்தின் நிர்வாக... Read more »

மாம்பழம் சின்னத்துக்கே தமிழரசுக் கட்சியின் காரைநகர் கிளை ஆதரவு

இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைநகர் மூலக் கிளையானது, நாடாளுமன்ற தேர்தலில்  சுயேட்சைக்குழு 14இல் போட்டியிடும் மாம்பழம் சின்னத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக காரைநகர் மூலக்கிளையின் தலைவரும், காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான க. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் வட்டுக்கோட்டையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்... Read more »

பூநகரியில் 80 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கேரள கஞ்சா இன்று அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தல் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவிற்க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடி படையினருடன் இணைந்து சுற்றிவளைக்கப்பட்ட போது 80 கிலோ கஞ்சா மீட்கப்பட்டடுள்ளது. மீட்கப்பட்ட... Read more »