தமி்ழ், முஸ்லிம் கட்சிகளை இணைத்து தேசிய அரசாங்கம்

தமி்ழ், முஸ்லிம் கட்சிகளை இணைத்து தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு.

“பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளை உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும்” – இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய அரசாங்கம் அமைக்கப்படுவது தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் எனவும் அவர் கூறினார்.

கொழும்பிலிருந்து வெளியாகும் டெய்லி மிரர் பத்திரிகைக்கு கருத்து தெரிவித்துள்ள விஜித ஹேரத், மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், மூன்றில் இருண்டு பெரும்பான்மை ஆசனங்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

எனினும், ஆரோக்கியான அரசியல் சூழலை உருவாக்கும் வகையில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் வெளிப்படையான கலந்துரையாடல்களை மேற்கொண்டு தேசிய அரசாங்கத்தை உருவாக்க எதிர்பார்க்கின்றோம்.

இந்த நாட்டில் உண்மையான தேசிய ஒற்றுமையை உருவாக்குவதற்கும் இது வழிவகுக்கும்”-என்றார்.

Recommended For You

About the Author: RK JJ