நாம் ஒற்றையாட்சி அரசியலமைப்பையோ அதன் அடிப்படையிலான 13 ஆம் திருத்தத்தையோ ஏற்றுக்கொண்டால்,
இத்தனை காலமும் எமது மக்களும் மாவீரர்களும் செய்த அர்ப்பணிப்பும் தியாகமும் வீணாகிவிடும்.
அப்படியான ஒற்றையாட்சி அரசியலமைப்பை உறுதியாக நிராகரிப்பதன் மூலமே எம்மீதான வரலாற்றுப் பழியை தவிர்க்க முடியும்.
-இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இலங்கையின் கடந்த இரண்டு அரசியலமைப்பு உருவாக்கத்திலும் தமிழர்களது அரசியல் அபிலாசைகள் கருத்தில் கொள்ளப்படாமையை அடுத்து தமிழர்கள் அதிலிருந்து வெளியேறியமையினால் அரசியல் அமைப்புகள் இந்த நாட்டின் இரண்டாவது பெரிய தேசிய இனமாகிய தமிழர்களின் பங்களிப்பின்றையே உருவாகி இருக்கின்றது அதனால் அந்த அரசியலமைப்பின் தார்மீக சட்டவலு குறைந்து இருக்கின்றது எமது மண்ணில் ஒரு இனப் பிரச்சினை இருக்கிறது இந்த நாட்டின் இரண்டாவது பெரிய தேசிய இனத்தை ஒடுக்கியே இந்த நாட்டின் உயரிய சட்டமாகிய அரசியலமைப்பு உருவாகி இருக்கின்றது என்ற செய்தியை அதை இதுவரை காலம் என்று சொல்லி வருகின்றது அதனால் தான் ஐநா சபையிலும் சரி சர்வதேசமல் அரங்குகளிலும் சரி தமிழர்களது பிரச்சினை குறித்த பேச்சுக்கு வரும் ஒவ்வொரு வேளையிலும் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களை கவனத்தில் கொண்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் மூலமே இந்த இனப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்கின்ற முடிவு எடுக்கப்படுகின்றது
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஒவ்வொரு வருட தீர்மானங்களிலும் எமக்கு பாரிய விமர்சனங்கள் இருக்கின்ற போதிலும் அந்தத் தீர்மானங்கள் கூட பாதிக்கப்பட்ட மக்களின் கரிசனையை ,தேவைகளை கருத்தில் எடுத்து புதிய அரசியலமைப்பை உருவாக்குங்கள் என்கின்ற யோசனை உள்ளடக்கபடுகின்றது.
அந்த வகையில் அணுகுமார அரசும் இந்த பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னர் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள் அந்த அரசியலமைப்பு 2015 முதல் 2019 வகையான காலப்பகுதியிக் உருவான ஒற்றையாட்சியை பேணுகின்ற பெளத்த நத மேலாதிக்கத்தை பேணுகினர ஏக்கிய ராஜ்ஜிய இடைக்கால வரைபை மையப்படுத்தியே அமையும் என கூறி இருக்கிறார்கள்..
.
ஆனால் வடக்கு கிழக்கில் ஜேவிபிக்கு ஆசனங்கள் கிடைக்காது என்பது ஜேவிபிக்கு நன்றாகவே தெரியும் ஜேவிபி தமிழர்களுக்கு செய்த கொடுமைகள் வரலாற்று ரீதியாக செய்த அநியாயங்கள் தமிழர்கள் மனதில் ஆழப் பதிந்து இருக்கும் என்பது ஜேவிபி நன்றாக தெரியும் அப்படியானால் இந்த உத்தேச அரசியலமைப்பு வரைவை மேற்கொண்டு செல்வதற்கு அவர்களிடம் இருக்கும் திட்டம் என்ன?
ஒற்றை ஆட்சியை மையப்படுத்திய பௌத்த மத மீலாதிக்கத்தை கொண்டிருக்கின்ற அந்த உத்தேச எயக்கிய ராஜ்ய அரசியலமைப்பு வரைவு உருவான காலத்தில்2015-19) வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவத்துவப்படுத்தி
19 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்திருந்தார்கள் அவர்கள் அனைவரும் அந்த ஒற்றை ஆட்சி அரசியலமைப்பை ஆதரித்தே இருந்தார்கள் இப்பொழுது ஜேவிபியின் எதிர்பார்ப்பு என்னவெனில் அந்த 19 பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது வேறுபவராக பிரிந்து நின்றாலும் அந்த ஒற்றை ஆட்சி அரசியலமைப்பை நிறைவேற்றும் நேரத்தில் அவர்கள் வழமை போலவே அதற்கு ஆதரவளிப்பார்கள் என்பதுதான் அப்படி அந்த ஒற்றை ஆட்சி அமைப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேராவது அவர்களுக்கு கிடைப்பின் அவர்களை வைத்துக்கொண்டு, வரலாற்றில் முதல்முறையாக தமிழர்களின் சம்மதத்தோடு ஒற்றையாடசி அரசியலமைப்பை பௌத்தமேலாதிக்கத்தை வைத்திருக்கின்ற அரசியல் அமைப்பை நிறைவேற்றி விட்டோம் என்கின்ற படத்தை அவர்கள் வெளியுலகத்திற்கு காட்டலாம்.
அதன் பின்னர் இலங்கையின் இனப்பிரச்சனை தீர்ந்து விட்டது எனக் கூறி ஸ்ரீ ஸ்ரீலங்கா மீதான அழுத்தங்களை தவிர்த்துக் கொள்ளலாம் என்பதுதான்
ஆகவே அந்த இடைக்கால அறிக்கை எவ்வளவு ஆபத்தானது என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் உத்தேச அரசியலமைப்பு வலியுறுத்துகின்ற ஆட்சி முறை தற்போது இருக்கும் ஒற்றை ஆட்சி முறையை விட மிக இறுக்கமானது.
இதை மிகத் தெளிவாகவே 2015ல் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றி அதன் அங்குரார்பன உரையில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவாக கூறியிருந்தார்.
பெரிய பிரித்தானியா மற்றும் உலகின் பல்வேறு ஒற்றை ஆட்சி நாடுகளை உதாரணம் காட்டி அங்கிருக்கும் ஒற்றை ஆட்சி முறைகளில் சில இனத்துவ குழுங்களுக்கு இருக்கின்ற தனித்துவ உரிமைகளை சுட்டிக்காட்டி( பெரிய பிரித்தானியாவில் நான்கு தேசங்ககளை அங்கீகரிக்கின்ற தன்மக் போன்றன)
அவையெல்லாம் இலங்கைக்கு பொருந்தாது எனவே இலங்கைக்கு பொருத்தமான சிங்கள பௌத்த மீலாதிக்கத்தை மையப்படுத்திய புதிய ஒரு ஒற்றையாட்சி முறைமையை மையப்படுத்திய அரசியலமைப்பை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்
அதனால் தான் புதிய அரசியலமைப்பு வரைவின் இடைக்கால அறிக்கையில் இறைறமை பகிரப்பட மாட்டாது தெளிவாக கூறியிருந்தார்கள் சமஸ்டி கட்டமைப்பு ஒன்றின் மிக அடிப்படை பண்பு பகிரப்பட்ட இறைமை.
ஒற்றை ஆட்சியின் போது பகிரப்பட்டிருக்ககாது.
ஆனால் அந்த ஒற்றையாட்சி அரசியலமைப்பின் வரைபை உருவாக்கிய தமிழரசு கட்சியை சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அதில் பெயர் பலகை இல்லாத சமஸ்டி தான் என்று கூறித் தருகிறார்கள் தமிழரசு கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டில் தமிழர்கள் ஒரு தேச அந்தஸ்து கூடியவர்கள் சமஸ்டி தான் நமக்கு தீர்வு என்று இருக்கின்ற போது வரலாறும் எமக்கு அதை கற்பித்து தந்திருக்கின்ற போது இப்போது புதிதாக சிலர் அந்தப் பெயர் பலகை தேவையில்லை உள்ளடக்கம் போதும் என்று சொல்லித் தருகிறார்கள் ஆனால் அந்தப் பெயர் பலகை தமிழுக்கு மட்டும்தான் சிங்களத்தில் மிகத் தெளிவாக அது ஏக்கிய ராஜ்ய என்று பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இலங்கை அரசியலமைப்பின் படி அரசியலமைப்பிலோ அல்லத்உ எந்த சட்டமூலங்களிலோ ஏதாவது சந்தேகம் ஏற்படின் இறுதி முடிவாக சிங்களத்தில் இருப்பதே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதுதான் சட்டம்..
ஆனால் இதை தயாரித்த பாராளுமன்ற உறுப்பினர் சொல்லுகின்றார் பெயர் பலகை தேவையில்லை என்று. ஆனால் அது தமிழுக்கு மட்டும் தான் சிங்களத்துக்கு அல்ல எவ்வளவு பெரிய துரோகம் இது
இந்த அரசியலமைப்பை தான் நிறைவேற்ற அனுரகுமார எண்ணி இருக்கிறார்
வரலாற்றில் முதல் தடவையாக தமிழர்கள தேச அந்தஸ்தை நாங்களாகவே விரும்பி கைவிட்டு இந்த குற்றியாட்சி அரசியலமைப்பை ஏற்றுக் கொள்ளப் போகிறோமா அந்த வரலாற்று துரோகத்தை இழைக்கப் போகிறோமா என்று எங்களை நாங்கள் கேட்டுக் கொள்வோம்
இந்த உத்தேச அரசியல் அமைப்பை நிறைவேற்ற தான் ஏனைய தமிழ் கட்சிகள் உங்களிடம் வாக்கு கேட்கின்றனர.
இதற்காகவா 50,000 போராளிகள் தங்கள் உயிரை கொடுத்தார்கள் இதற்காகவா ஏறத்தாழ 1.5 லட்சம் மக்கள் பலியானர்கள்??
இறுதிக்கட்ட போர் தொடங்கிய காலப் பகுதியில் சர்வதேச சமூகம் இயக்கத்திற்கு ஒரு செய்தியை அனுப்ப முனைந்தது ஒற்றையாட்சி சி அமைப்பின் கீழான 13 ஆம் திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வை ஒரு ஆரம்பபுள்ளியாக ஏற்றுக் கொள்ளுமாறு விடுதலைப் புலிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனர் ஆனால் தேசியத் தலைவரும் அதை அடியோடு நிராகரித்துவிட்டார் அவருக்கு தெரியும் ஒற்றை ஆட்சி அமைப்பு என்பது ஒரு முற்றுப்புள்ளி, அதை ஆரம்பபுள்ளியாக அதிலிருந்து மேகே நகரவே முடியாது
அதுபோலவே யுத்தத்தின் இறுதி காலகட்டத்திலும் இதே செய்தி அனுப்பப்பட்டது அதற்கும் தேசிய தலைவர் அதே பதிலையே கொடுத்திருந்தார் ஒற்றை ஆட்சியின் கீழான 13ஆம் திருத்தத்தை ஏற்றுக் கொண்டால் நமது தேசத்தின் உருவம் இருக்கும் ஆனால் உள்ளே வெறும் கோது தான் மிஞ்சும் .
இப்படியாக ஒரு இனப்படுகொலையின் பின்னர் கூட நமது மக்கள் 13ஆம் திருத்தத்தை ஏற்றுக் கொண்டிடுக்க்வில்லை.
உயிர்கொடுத்தும் எமது நிலைப்பாடு காப்பார்றி கடத்தப்படிருக்கிறது.
அதை விலைபேச நாம் அனுமதிக்லபோகிறோமா
இனப்படுகொலை நடந்து 15 வருடங்களாகவும் தமிழ் மக்கள் நூலகம் மூலமும் ஒரு சமஷ்டிக்காகவேஆணையை வழங்கி வந்திருக்கின்றார்கள்.
ஆனால் இந்த முறை முதல் முறையாக அந்த ஒற்றை ஆட்சி அரசிய அரசியலமைப்பை நிறைவேற்ற ஆணை கேட்டு உங்கள் முன் வந்திருக்கிறார்கள்
ஆகவே எனது அன்பார்ந்த தமிழ் மக்களே இந்த தேர்தலில் உங்கள் முன் இரண்டு தெரிவுகள் தான் இருக்கின்றது ஒன்று சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஆதரித்தல் அதன் மூலம் இந்த உரிமைக்கான பயண்த்தை உயிர்ப்புடன் உடன் வைத்திருக்க முடியும்.
இரண்டாவது தெரிவு ஏனைய தமிழ் கட்சிகளுக்கு வாக்க வாக்களித்து நாம் உயிரோடுத்து வளர்த்த்ச் போராட்டத்தை விலை பேசி விற்க முடியும்
ஆழமாக சிந்தித்து எனது மக்களே உங்கள் முடிவுகள் எடுங்கள்- என்றார்.