மஹிந்தானந்த தாக்கியதில் சக நாடாளுமன்ற உறுப்பினருக்கு கால் முறிவு?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் குணதிலக ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த குணதிலக ராஜபக்ஷவுக்கு மூன்றரை மணிநேர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது காலில் நேற்று செவ்வாய்க்கிழமை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்திரசிகிச்சைக்கு... Read more »

ரங்கே பண்டாரவின் கருத்து மக்களின் கவனத்தை திசைதிருப்புகிறது: மஹிந்த தேசப்பிரிய

உண்மையான ஜனாதிபதித் தேர்தலுக்குப் பதிலாக போலியான வாக்கெடுப்பு நடத்துவது போன்ற அறிக்கைகளை வெளியிடுவது மக்களின் கவனத்தை தேவையற்ற விடயங்களுக்கு திசைதிருப்புவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பொது வாக்கெடுப்பை நடத்தி பொதுத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமென என ஐக்கிய தேசியக்... Read more »
Ad Widget

கொடூரமாக தாக்கப்பட்ட சிறுவன்: வெளிஓயாவில் மூவர் கைது

சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் மிகவும் மூர்க்கத்தனமாக தாக்கப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிஓயா பொலிஸார், முல்லைத்தீவு பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸ் அதிரடிப்படையினர் இணைந்து இன்று (05) அதிகாலை மேற்கொண்ட... Read more »

சீரற்ற வானிலை – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அத்துடன், சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட பல்வேறு சம்பவங்களினால் 41 பேர் காயமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும்,... Read more »

கோவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு மடத்துவெளி எட்டாம் வட்டாரத்தைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.... Read more »

பரீட்சை பெறுபேறுகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம்

மாணவர்கள் மற்றும் பெற்றோர் அண்மையில் வெளியான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க வலியுறுத்தியுள்ளார். பரீட்சை பெறுபேறுகளை அடையாளம் தெரியாத நபர்கள் தவறாகப் பயன்படுத்திய சம்பவங்கள் தொடர்பில்... Read more »

மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி ரணில்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றதை அடுத்து இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது உத்தியோகபூர்வ எக்ஸ்... Read more »

வெற்றி, அறிவித்தார் மோடி! கூட்டணி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் பேச்சு

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். வாக்களர்கள் தனது கட்சி மீது வைத்திருந்த நம்பிக்கைக்கும் மோடி நன்றி தெரிவித்தார். அதேவேளை உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட மோடி 1.52 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்... Read more »

அநுராதபுரம் மாவட்டத்தில் மூடப்பட்ட நிலையில் 15 பாடசாலைகள்

அநுராதபுரம் மாவட்டத்தில் 2010ஆம் ஆண்டு முதல் இன்று வரை 15 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (4) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். போதிய எண்ணிக்கையான மாணவர்கள் இல்லாத காரணத்தினால் இந்த பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அநுராதபுரம் மாவட்ட சபை உறுப்பினர்... Read more »

ஆசன ஒதுக்கீடுகளை பகிர்வதற்கான ஒரு வியூகமே பொது வேட்பாளர் நாடகம்: சிறீரங்கேஸ்வரன்

இந்தியத் தேர்தல் களம் தற்போது நிறைவை எட்டியிருக்கும் நிலையில் இலங்கைத்தீவும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. வேட்பாளர் யார் என்ற கேள்வி அநேகமாக கேட்கப்பட்டு வரும் நிலையில் இந்தக் கேள்வி வடக்கில் பேசு பொருளாக மாறியுள்ளது. தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளர் ஒருவரை முன் வைக்க... Read more »