நாடளாவிய ரீதியில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட பல்வேறு சம்பவங்களினால் 41 பேர் காயமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நிலவும் சீரற்ற வானிலையால் 23 மாவட்டங்களின் 262 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 33,422 குடும்பங்களைச் சேர்ந்த 130,021 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நாடளாவிய ரீதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 116 தற்காலிக முகாம்களில் 2,368 குடும்பங்களைச் சேர்ந்த 9,248 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.