பரீட்சை பெறுபேறுகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம்

மாணவர்கள் மற்றும் பெற்றோர் அண்மையில் வெளியான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க வலியுறுத்தியுள்ளார்.

பரீட்சை பெறுபேறுகளை அடையாளம் தெரியாத நபர்கள் தவறாகப் பயன்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் பல முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பரீட்சை இலக்கம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அடங்கிய ஆவணங்களின் நகல்களை பகிர்வது, பரீட்சார்த்தியின் உண்மையான அடையாளத்தை மாற்றிவிடச் செய்துவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பது, உதவித்தொகை பெறுவது போன்ற தனிப்பட்ட நலன்களுக்காக இந்தத் தகவலைப் பலர் தவறாகப் பயன்படுத்தலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பரீட்சை பெறுபேறுகளை சமூக ஊடகங்களில் பகிர்வதை தவிர்க்குமாறு பேராசிரியர் அமரதுங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin