தெருவோர குழந்தைகளை அரசாங்கத்தின் பொறுப்பில் எடுத்து, தகுந்த பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை தொடரும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வௌியிடும்போது, பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா... Read more »
உலகப் புகழ்பெற்ற லியோனார்டோ டா வின்சியின் மோனாலிசா ஓவியத்தின் மீது சூப்பை ஊற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஓவியத்தின் மீது தக்காளி சூப் ஊற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த போராட்டம் சுற்றுச்சூழலுக்கு எதிரானது என... Read more »
யாழ்ப்பாணத்தில் 29 வயது இளைஞர் ஒருவரைக் காணவில்லை என சுன்னாகம் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், இணுவில் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த இளைஞன், கடந்த 26 ஆம் திகதி வியாழக்கிழமை மதியத்திலிருந்து காணாமல் போய் உள்ளதாக அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த இளைஞர்... Read more »
சீனாவில் ஷாங்காய் நகரை சேர்ந்தவர் லியூ. மூதாட்டியான இவர் தனக்கு சொந்தமான 2.8 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள சொத்துகளை தனது 3 பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுக்கும் வகையில் உயில் எழுதி வைத்தார். ஆனாலும் அந்த மூதாட்டி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது அவரது பிள்ளைகள்... Read more »
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் அங்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா எனப்படும் இந்த நோய் அங்குள்ள பறவைகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக, கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டுப் பறவைகளும் இந்த நோயால்... Read more »
இலங்கை கிரிக்கெட் அணிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் தலையீடு காரணமாக நவம்பர் 2023 இல் விதிக்கப்பட்ட தடை, இலங்கை அரசாங்கத்தின் உத்தரவாதத்துடன் நீக்கப்பட்டது. Read more »
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய மற்றும் பொதுக் குழு கூட்டம் நேற்று இடம்பெற்றிருந்த நிலையில், பெரும் சர்ச்சைகளும் சண்டைகளும் ஏற்பட்டிருந்தன. இதனை பலரும் விமர்சித்திருந்த நிலையில், நேற்றைய கூட்டத்தில் என்ன நடந்தது என்றத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. நேற்று காலை 10.30 மணிக்கு கட்சியின்... Read more »
அவுஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 27 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவுஸ்திரேலிய மண்ணில் இளம் வீரர்களை கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி யோசிக்க முடியாத ஒன்றை செய்துள்ளது. அவுஸ்திரேலியாவின் கோட்டையென கருதப்படும் கப்பாவில் நடந்த இரண்டாவது டெஸ்ட்... Read more »
இலங்கை தமிழரசுக் கட்சி விரும்பினால் எம்முடன், இணைந்து செயற்பட முடியும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது. தமிழரசு கட்சி விரும்பினால் முன்னணியின் பெயரை மாற்றம் செய்யலாம் எனவும் கூட்டணியின் யாப்பில் மாற்றங்கள் செய்ய விரும்பினால் அது குறித்து விவாதிக்கலாம் எனவும்... Read more »
முப்படையினரின் சீருடைகள் போன்ற ஆடைகளை அணிந்தாலோ அல்லது அடையாளத்தினை பயன்படுத்தினாலோ விதிக்கப்படும் தண்டப்பணம் 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட குற்றவியல் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.... Read more »

