பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பொலிஸாருக்கு ஊதிய உயர்வு

நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அதேவேளை, வருமான வரி மற்றும் இதர வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (13) செவ்வாய்க்கிழமை முதல் பொலிஸாருக்கு உணவு மற்றும் தங்குமிட கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவுள்ளன. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக அடுத்த ஆறு மாதங்களுக்கான கொடுப்பனவையும், அடுத்த... Read more »

ஆப்பிரிக்காவின் கால்பந்து சாம்பியன் ஐவரி கோஸ்ட்

உலகில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் மிகவும் சுவாரஸ்யமான தொடர்களில் ஒன்றாக கருதப்படும் ஆப்பிரிக்கக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஐவரி கோஸ்ட்டு நைஜீரியாவை தோற்கடித்து கிண்ணத்தை வென்றுள்ளது. ஆப்பிரிக்காவின் பலமான அணிகளாக கருதப்படும் ஐவரி கோஸ்ட்டு நைஜீரியா மோதிய இறுதிப் போட்டி நேற்று... Read more »
Ad Widget

அம்பாறையில் மன்னர் காலத்து பாதை கண்டுபிடிப்பு

அம்பாறை – ஒலுவில் தீகவாபி அருகே மன்னர் காலத்து பாதையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை – தீகவாபி ஒலுவில் வீதியில் பெய்து வரும் அடை மழையால் அடித்துச் செல்லப்பட்ட இடத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கற்கள் பதிக்கப்பட்ட புராதனப் பாதையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக தீகவாபி மற்றும்... Read more »

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு 19 ஆம் திகதி

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரியவந்துள்ளது. கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மாநாடு நடைபெறவுள்ளது. இதேவேளை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியானது முதல் ஒரு வருடத்திற்கு குகதாசனுக்கு... Read more »

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்சில் திடீர் புகை! அவசர தரையிறக்கம்

ஸ்ரீலங்கா விமான நிறுவனத்திற்கு சொந்தமான யுஎஸ் 605 என்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் மேல்போர் நகரில் இருந்து கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை நோக்கிய பயணத்தை தொடங்கிய குறித்த விமானம், பயணம் தொடங்கிய 20 ஆவது நிமிடத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தினுள் ஏற்பட்ட திடீர்... Read more »

சஜித் அணியின் முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்தாகின்றது: மனோ எம்.பி

ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைமைகளுக்கு இடையிலான முதல் கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் எதிர்வரும் 14 ஆம் திகதி கைச்சாத்திடவுள்ளது. ஒருவன் செய்தி சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலில் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் இதனை தெரிவித்தார். இதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர்... Read more »

பதவியில் இருந்து நீக்கியது பழிவாங்கும் செயல்

அரசுக்கு ஆரம்பத்தில் இருந்து பில்லியன் கணக்கில் இலாபத்தை பெற்றுக்கொடுத்த பாராளுமன்ற வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து தன்னை நீக்கியது பழிவாங்கும் செயல் என பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய குடியரசு கட்சியின் தலைவருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். சாராய... Read more »

ஜோ பைடனின் நினைவாற்றல் குறித்து விமர்சனங்கள் முன்வைப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் வயது மற்றும் அவரது நினைவாற்றல் தொடர்பான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார ராஜாங்க செயலாளர்... Read more »

தேர்தலுக்கு 20 பில்லியன் ரூபா நிதி தேவை

ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் ஆகியவற்றுக்கு சுமார் 20 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக தாம் ஏற்கனவே நாடாளுமன்றத்திற்கும் நிதியமைச்சிற்கும் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம்... Read more »

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது: மறுக்கும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பணத்திற்காக அரசாங்கத்திற்கு எதிராக அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் முதன் முறையாக... Read more »