ஜோ பைடனின் நினைவாற்றல் குறித்து விமர்சனங்கள் முன்வைப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் வயது மற்றும் அவரது நினைவாற்றல் தொடர்பான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன், பைடனின் வயது குறித்து முக்கிய கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

செய்தி நிறுவனம ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில், பைடனின் வயது தொடர்பான பிரச்சினை நியாயமானது என ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார்.

வயது காரணமாக,பைடனின் நினைவாற்றலில் பல குறைபாடுகள் கண்டறியப்பட்டதாக அண்மையில் வெளியான அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.

இந்த பிரச்சினை குறித்து வெள்ளை மாளிகையும் கவனத்தில் கொண்டுள்ளது. மற்றொரு ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் விடயத்தில் வயதுப் பிரச்சினை உள்ளது.

இளம் வாக்காளர்களை ஈர்ப்பதில் இருவரும் சிரமங்களை சந்திக்க நேரிடும். வயது ஒரு பிரச்சினையாக இருந்தாலும், வாக்காளர்கள் சிறந்த வேட்பாளரை தெரிவு செய்வது முக்கியம். பைடன் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும்.

அவர் பல நல்ல செயல்களை செய்த பெருமைக்குரியவர் எனவும் ஹிலாரி கிளின்டன் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் டிரம்ப்பும் மீண்டும் போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளன.

இதனிடையே ஜோ பைடனின் நினைவற்றால் குறைந்துள்ளமைக்கான போதுமான ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த பிரச்சினை அமெரிக்காவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மேலும் குடியரசு கட்சியின் இதனை பலமான பிரசாரக் கருவியாக பயன்படுத்தி வருகின்றனர்.

எது எப்படி இருந்த போதிலும் தனது நினைவாற்றல் தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் உள்ள விடயங்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை எனக்கூறி ஜோ பைடன் அந்த அறிக்கையை நிராகரித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin