அம்பாறை – ஒலுவில் தீகவாபி அருகே மன்னர் காலத்து பாதையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை – தீகவாபி ஒலுவில் வீதியில் பெய்து வரும் அடை மழையால் அடித்துச் செல்லப்பட்ட இடத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கற்கள் பதிக்கப்பட்ட புராதனப் பாதையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல வருடங்களாக தீகவாபி மற்றும் ஒலுவில் பிரதேசவாசிகள் ஒலுவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு இந்தப் பாதை அமைந்துள்ள பகுதியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அண்மையில் பெய்த கடும் மழையுடன் கல்ஓயா ஆறு பெருக்கெடுத்து இந்த இடத்தில் முற்றாக உடைக்கப்பட்டு அதன் பின்னரே இந்த கற்கள் பதிக்கப்பட்ட புராதனப் பாதை காணப்பட்டதாக மாணிக்கமடு விகாரையின் விகாராதிபதி அம்பகஸ்பிட்டிய சீலரதன தேரர் தெரிவித்துள்ளார்.
அம்பகஸ்பிடிய சீலரதன தேரர் ஊடகவியலாளர்களுடன் சென்று இந்த இடத்தை பார்வையிட்டார்.
இந்த இடத்தில் பழமையான கற்கள் ஒழுங்கான முறையில் அமைக்கப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.
இந்த இடத்திலிருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீகவாபி ரஜமஹா விகாரை ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மற்றும் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு தீகவாபியில் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஸ்தூபம் 500 மீட்டர் தொலைவில் உள்ளது.
இது தொடர்பில் கிழக்கு மாகாண தொல்லியல் உதவிப் பணிப்பாளர் அனுஷன் முனசிங்க, அந்தக் கற்கள் சில வரலாற்றுச் சிறப்புகளைக் காட்டுகின்றன.
இது குறித்து ஏற்கனவே அறிக்கை அனுப்பியுள்ளோம். மேலும், நேரில் ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.