இலங்கையில் மூன்று தசாப்த காலம் நீடித்த விடுதலைப் போராட்டத்தை ஆயுத ரீதியாக முடிவுக்கு கொண்டுவந்த ராஜபக்ச குடும்பம், தம்மை அரச குடும்பமாக சிங்கள தேசத்திற்கு காண்பிக்க முற்பட்டது. ஆனாலும் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார வங்குரோத்து ராஜபக்சாக்களை ஆட்சியைப் புரட்டிப்போட்டது. ராஜபக்ச குடும்பத்தை, நாட்டிலுள்ள சிங்கள... Read more »
யாழ்ப்பாணத்தில் இருந்து தனது மனைவியுடன் கொழும்புக்குச் சிகிச்சைக்காக வருகைதந்த குடும்பஸ்த்தர் ஒருவர் கடத்தப்பட்டு கைவிரலில் போடப்பட்டிருந்த இருந்த தங்க மோதிரம் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவர் வேறு யாருமல்ல. கொழும்பில் இருந்து வெளிவரும் தினக்குரல் நாளிதழில் ஒப்புநோக்குநராகப் பணியாற்றிப் பின்னர்... Read more »
யான் ஓயாவின் கிளை ஆற்றை மறித்து, விவசாயம் மேற்கொள்வதற்கான முயற்சியில் திருகோணமலை, திரியாய் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், ஈடுபட்டு வருகின்றனர். திரியாய் விவசாயிகளின் பாரிய முயற்சியின் காரணமாக 1300க்கு மேற்பட்ட மண் மூடைகள் 15 அடி உயரத்திற்கு அடுக்கப்பட்டு ஆற்று நீரை வயல்களுக்கு திருப்பியுள்ளனர்.... Read more »
யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த 60 வயதான செல்லையா திருச்செல்வம் தனது தாடியாலும் தலை முடியினாலும் ஏஷ் பட்டா ரக வாகனத்தை 1000 மீற்றர் தூரம் வரை இழுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். செல்லையா திருச்செல்வம் தனது தாடியால் ஏஷ் பட்டா ரக வாகனத்தை ஏற்கனவே... Read more »
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் இந்த வார இறுதியில் கொழும்புக்கு அழைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், கட்சியின் அனைத்து அமைப்புகளின்... Read more »
பிரான்ஸில் மரக்கடத்தல் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக காடுகள் அழிவடைந்து வருவதாக குறிப்பிடப்படுகிறது. இதன்படி, கடந்த சில மாதத்திற்கு முன்புவரை காணப்பட்ட காடுகளில் ஒருபகுதி முற்றிலுமாக அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அத்துடன், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள தரமான மரங்கள் களவாடப்பட்டுள்ளதாக அதிகாரிகள்... Read more »
ஐரோப்பிய நாடுகளில் புகலிட கோரிக்கையாளர்களின் நெருக்கடி அதிகரித்துள்ள பின்னணியில் சுவிட்ஸர்லாந்தில் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழ் குடும்பம் ஒன்று நாடுகடத்தப்பட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்து நாட்டின் குடிவரவு, குடியகல்வு சட்டத்திற்கு அமைவாகவே இந்த குடும்பத்தினர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தந்தை, தாய் மற்றும் இரு பிள்ளைகள்... Read more »
இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் ஒரு வீதமாக இருக்கும் செல்வந்தர்கள், இந்தியாவின் 40 வீத செல்வத்தை வைத்திருப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. உலக சமத்துவமின்மை ஆய்வகத்தின் சமீபத்திய ஆய்வின்படி, இந்திய மக்கள் தொகையில் ஒரு வீதமாக இருக்கும் செல்வந்தர்கள் ஆறு தசாப்தங்களுக்கு மேலாக அதிக செல்வ... Read more »
இலங்கையில் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில், அதிகளவான மக்கள் துரிதமாக பணம் சம்பாதிக்க முனைவதால் தொடரும் மோசடிகள் மற்றும் இணையவழி மோசடிகளுக்கு தனிநபர்கள் இரையாகும் அபாயம் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது. தற்போது, சமூக ஊடக தொடர்பாடல் தளங்கள் மூலம்... Read more »
இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட்டில் வெற்றிகரமான அணியாக வலம் வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதற்கு ஐபிஎல் தொடர் 2008இல் தொடங்கப்பட்டதிலிருந்து சென்னை அணியின் தலைவராகச் செயல்பட்டு வந்த மகேந்திர சிங் தோனி முக்கியமானதொரு காரணம். அவருக்கு 42 வயதாகிவிட்ட... Read more »

