பிரான்ஸில் அதிகரித்துவரும் மரக்கடத்தல்

பிரான்ஸில் மரக்கடத்தல் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக காடுகள் அழிவடைந்து வருவதாக குறிப்பிடப்படுகிறது.

இதன்படி, கடந்த சில மாதத்திற்கு முன்புவரை காணப்பட்ட காடுகளில் ஒருபகுதி முற்றிலுமாக அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள தரமான மரங்கள் களவாடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், மரங்களை வெட்டுவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதன் காரணமாக மர கடத்தல்காரர்கள் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்திவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, பிரான்ஸின் Yvelines திணைக்களப் பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வெட்டப்பட்ட மரங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே, பிரான்ஸின் ஒரு புலப்பரப்பில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு உத்தியோகபூர்வ அனுமதி பெற்ற உள்நாட்டு மரம் வெட்டும் நிறுவனம் ஒன்று இந்த கடத்தலுக்குப் பின்னால் இருப்பதாக அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த நிறுவனம் அனுமதி வழங்கப்பட்ட எல்லைகளை மீறி, முதலில் திட்டமிட்டதை விட கணிசமானளவு மரங்களை வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு களவாடப்பட்ட மரங்கள் சீனாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும், குறித்த மரங்கள் அங்கு தரை அமைப்புக்கு பயன்படுத்தப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: admin