இஸ்ரேலிய இராணுவத்தையும் சியோனிசத்தையும் கடுமையாகச் சாடிய 96 வயது ஹரேடி ஆன்மீகத் தலைவர் ரப்பி டோவ் லாண்டோ!
சியோனிசத்தையும் இஸ்ரேலிய இராணுவத்தையும் விமர்சித்து 96 வயதான அல்ட்ரா-
ஆர்தடாக்ஸ் சமூகத் தலைவர் ரப்பி டோவ் லாண்டோ பேசிய காணொளியை இஸ்ரேலின் சேனல் 12 ஊடகம் வெளியிட்டதைத் தொடர்ந்து,
நெதன்யாகு அரசிற்குள் பெரும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பிரதமர் நெதன்யாகுவின்
கூட்டணியில் அங்கமாக உள்ள ‘டெகல் ஹடோரா’ கட்சியின் ஆன்மீகத் தலைவரான லாண்டோ,
தற்போதைய அரசமைப்பு கடவுளின் பெயரை அவமதிக்கும் செயல் எனச் சாடியுள்ளார்.

