உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை மற்றும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பான ஈரானின் முன்மொழிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளமை சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Reuters வெளியிட்டுள்ள சமீபத்திய சந்தைத் தகவலின்படி, Brent கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 1.74% உயர்ந்து 105.64 அமெரிக்க டொலராகவும், WTI கச்சா எண்ணெய் 1.23% உயர்ந்து 93.55 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் விநியோகம் தொடர்பான நிச்சயமற்ற நிலை தொடர்வதால், உலகளாவிய எரிசக்தி சந்தையில் விநியோகத் தடைகள் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளதாக சந்தைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கச்சா எண்ணெய் விலையின் அடுத்தடுத்த மாற்றங்கள் உலக நாடுகளின் எரிபொருள் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், சர்வதேச சந்தை நிலவரம் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

Recommended For You

About the Author: admin