ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்!
டோகோ எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தி சிறைபிடித்தது ஈரான்
மேற்கு ஆப்பிரிக்க நாடான டோகோவின் கொடியுடன் பயணித்த ‘Trend’ என்ற எண்ணெய் கப்பல் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்றதாகக் கூறி, கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதலின் போது கப்பலில் தீப்பற்றியதையடுத்து கப்பல் இயக்கத்தை நிறுத்திய நிலையில், ஈரானிய கடற்படையினர் கப்பலைக் கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமனின் கசாப் பகுதிக்கு வடகிழக்கே சுமார் 16 கடல் மைல் தொலைவில் அடையாளம் தெரியாத எறிபொருள் தாக்கியதாக UKMTO தெரிவித்துள்ளது.
கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் காரணமாக சர்வதேச எண்ணெய் விநியோகம், கப்பல் போக்குவரத்து மற்றும் காப்பீட்டுச் செலவுகள் தொடர்பில் புதிய பதற்றம் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

