பிரான்ஸில் வெடிக்கும் எரிபொருள் விலை உயர்வுப் போராட்டம் !!

பிரான்ஸில் வெடிக்கும் எரிபொருள் விலை உயர்வுப் போராட்டம் !!

புதிய சேமிப்புத் திட்டத்தால் எழுந்துள்ள குழப்பம்!

பிரான்ஸில் அதிகரித்து வரும் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தைச் சீரமைக்கவும் அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

 

அதற்கமைய, வரும் 2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 54 பில்லியன் யூரோ அளவுக்கு செலவினங்களைக் குறைக்கும் சேமிப்புத் திட்டத்தை உள்ளடக்குவதாகப் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

 

இது நாட்டின் செலவின இயந்திரத்தைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலை எதிர்நோக்கியுள்ள லெகோர்னு அரசு, பத்திரச் சந்தையின் கடும் அழுத்தம் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களால் அதிருப்தியில் உள்ள வாக்காளர்களைச் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

 

இதன்காரணமாக, பற்றாக்குறையைக் குறைக்கும் 2027 பட்ஜெட்டை இறுதி செய்யும் பணியில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

 

எனினும், பொதுமக்களின் வரிச்சுமையை அதிகரிக்காமல் இந்தச் சேமிப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் எனப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

 

இதற்கிடையில், எரிபொருள் விலை உயர்வு மற்றும் மோசமான வேலைவாய்ப்புச் சூழலைக் கண்டித்துத் தெற்கு பிரான்ஸில் உள்ள துறைமுகங்களை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Sete மற்றும் Frontignan உள்ளிட்ட பகுதிகளில் டயர்களை எரித்து எண்ணெய் கிடங்குகளுக்கான வழிகளை அவர்கள் மறித்தனர்.

 

எரிசக்தி விலை நெருக்கடியால் தொடர்ந்து வெடித்து வரும் இந்தப் போராட்டங்கள், அரசாங்கத்தின் பட்ஜெட் தயாரிப்புப் பணிகளை மேலும் சிக்கலாக்கியுள்ளன.

 

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளையும் தாண்டி இந்த பட்ஜெட்டை நிறைவேற்ற வேண்டிய சவாலை அரசு எதிர்கொண்டுள்ளது.

 

மத்திய கிழக்கு நெருக்கடியின் தாக்கம் காரணமாக இந்த ஆண்டிற்கான 5% பற்றாக்குறுதி இலக்கை அடைய முடியாது என நிதித்துறை அமைச்சர் ரோலண்ட் லெஸ்குரே ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளார்.

 

மேலும், எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்காக அமைச்சர்கள் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

சோசலிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் தங்களின் ஆதரவை விலக்கிக் கொண்டுள்ள நிலையில்,

 

அடுத்த ஆண்டுத் தேர்தலின் முன்னணியில் உள்ள Marine Le Pen RN கட்சியின் நிலைப்பாடு இந்த பட்ஜெட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளது.

 

ஓய்வூதியத் தொக்கையைச் பணவீக்கத்திற்கு ஏற்ப உயர்த்தாமல் சேமிக்கும் திட்டங்கள் இடம்பெற்றால் அதற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக லெ பென் எச்சரித்துள்ளார்.

 

எனினும், எந்தவொரு அவசரச் சட்ட அதிகாரமும் பயன்படுத்தப்பட மாட்டாது என்றும், நாடாளுமன்றத்தில் வெளிப்படையான வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் பிரதமர் லெகோர்னு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

 

மறுபுறம், மீன்வளத்துறை அமைச்சர் கேத்தரின் சபாட் மேற்கொண்ட ஆறு மணி நேர நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு,

 

மத்திய தரைக்கடல் துறைமுகங்களில் மீனவர்கள் நடத்தி வந்த மூன்று நாள் முற்றுகைப் போராட்டத்தைத் விலக்கிக் கொள்ளச் சம்மதித்துள்ளனர்.

 

விவசாயம், மீன்பிடி மற்றும் கட்டுமானத் துறைகளுக்கான அவசரகால எரிபொருள் மானியங்களை ஆண்டின் இறுதி வரை நீட்டிப்பதாகப் பிரதமர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பிரான்ஸ் தற்போது கடுமையான அரசியல் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் வரலாற்றுச் சோதனைக் காலத்தைக் கடந்து வருகிறது.

Recommended For You

About the Author: admin