கடலுக்குப் புதிய குறுக்குவழி!
560 கி.மீ தூரத்தைக் அதிரடியாகக் குறைக்கும் சீனாவின் பிரம்மாண்ட பிங்லூ கால்வாய் திறப்பு!
சீனாவின் மிகப்பெரிய போக்குவரத்து உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க பிங்லூ கால்வாய் தற்போது அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டு கால உழைப்பில் உருவான இந்தக் கால்வாய், சீனாவை சர்வதேசக் கப்பல் போக்குவரத்துப் பாதைகளுடன் இன்னும் விரைவாகவும் திறம்படவும் இணைக்கும் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
நான்கு ஆண்டுகள் தீவிர உழைப்பில் கட்டப்பட்ட இந்தக் கால்வாய் சுமார் 134 கிலோமீட்டர் நீளம் கொண்டது.
இதுவரை சீனாவின் தென்பகுதி ஆறுகள் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் குவாங்சோ வழியாகச் சுற்றிக்கொண்டு கடலை அடைய வேண்டிய நீண்ட மற்றும் கடினமான சூழல் நிலவி வந்தது.
இந்தப் புதிய கால்வாயின் மூலம் கப்பல்கள் எவ்விதச் சுற்றலும் இன்றி நேரடியாகத் தெற்கு நோக்கிச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாகப் பயணத் தொலைவு சுமார் 560 கிலோமீட்டர் வரை குறைகிறதுடன், சரக்குப் போக்குவரத்துச் செலவும் 18 முதல் 30 சதவீதம் வரை குறையும் எனச் சீன அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
இந்தப் பயணத்தின் போது ஏற்படும் 65 மீட்டர் நீர்மட்ட வேறுபாட்டைச் சரத்துக் கப்பல்கள் பாதுகாப்பாகக் கடக்க ஏதுவாக பிரம்மாண்டமான நீர்ப்பூட்டுகள் இதில் அமைக்கப்பட்டுள்ளன.
பெய்பூ வளைகுடாவில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு ஆசியான் நாடுகளுக்கு நேரடி நடுகடற் பாதைகள் இதன் மூலம் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நவீன வர்த்தகப் பாதையின் வாயிலாகச் சீனப் பொருட்கள் தென்கிழக்காசியா மற்றும் உலகளாவிய சந்தைகளை மிக விரைவாகவும்
நேரடியாகவும் சென்றடைய முடியும். ஆசியாவின் வர்த்தக முகத்தையே மாற்றியமைக்கக் கூடிய இந்தத் திட்டம் சர்வதேசப் பொருளாதார அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

