ராணுவ நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்!!

ராணுவ நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்!!

சவூதி அரேபியாவுக்கு 48 எஃப்-35 லைட்னிங் 2 போர் விமானங்கள் மற்றும் அது தொடர்பான

உபகரணங்களை விற்பனை செய்வதற்கு சுமார் 24.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ விற்பனைக்கு ஒப்பந்தத்திற்கு

அமெரிக்க வெளியுறவுத் துறை, வியாழக்கிழமை அதிகாராப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது.

 

வளைகுடா பிராந்தியத்தில் சவூதி அரேபியாவின் பாதுகாப்புத் துறை திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த சாத்தியமான வெளிநாட்டு ராணுவ விற்பனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

இது அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு சக்தியாக விளங்கும், நேட்டோ அல்லாத ஒரு முக்கிய நட்பு நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவதன் மூலம்,

 

முன்மொழியப்பட்ட இந்த விற்பனை அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசியப் பாதுகாப்பு நோக்கங்களுக்கு ஆதரவளிக்கும் என்றும் இரண்டு நாடுகளுக்கு இடையிலான

 

பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் என கருதப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

Recommended For You

About the Author: admin