சவூதி அரேபியாவின் கோரிக்கையை அடுத்து ஹூதிகளை கட்டுப்படுத்த ஈரானுக்கு சீனா ரகசிய அழுத்தம்!

சவூதி அரேபியாவின் கோரிக்கையை அடுத்து ஹூதிகளை கட்டுப்படுத்த ஈரானுக்கு சீனா ரகசிய அழுத்தம்!

யேமனில் செயல்படும் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்துமாறு ஈரானிடம் சீனா இரகசியமாகக் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கடல் (Red Sea) கரையோரப் பகுதிகள் மற்றும் பாப் அல்-மந்தேப் (Bab el-Mandeb) ஜலசந்திப் பகுதிகளில் ஹூதி அமைப்பினர்

 

அண்மைக்காலமாக மேற்கொண்டு வரும் தீவிர இராணுவ முன்னேற்றங்களால் தமது எண்ணெய் ஏற்றுமதி மற்றும் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி,

 

சவூதி அரேபியா பெய்ஜிங்கிடம் உதவி கோரியதைத் தொடர்ந்து சீனா இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக மூன்று ஈரானிய வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகி உள்ளது.

 

சீனாவின் இரகசியக் கோரிக்கை:

 

சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் முக்கிய எரிசக்திப் பாதைகளைப் பாதுகாக்கும் நோக்கில்,

 

ஹூதிகள் மீதான தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அவர்களைக் கட்டுப்படுத்துமாறு ஈரான் அதிகாரிகளிடம் சீனா வலியுறுத்தியுள்ளது.

 

ஈரானின் பதில்:

 

இப்பிராந்தியத்தின் அமைதியும் ஸ்திரத்தன்மையும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதிலேயே தங்கியுள்ளது என தெஹ்ரான் பதிலளித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

சீனாவின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு:

 

பிராந்திய பதற்றங்கள் யேமன் மற்றும் செங்கடல் பகுதிகளுக்கு மேலும் பரவுவதை தான் விரும்பவில்லை எனவும், பேச்சுவார்த்தை மூலமே இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் சீனாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

ஈரான் மீது நேரடிப் பொருளாதார அச்சுறுத்தல்களை சீனா முன்வைக்கவில்லை என்ற போதிலும், ஈரானின் 80 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெய் ஏற்றுமதியை சீனா கொள்வனவு செய்வதால், தெஹ்ரானிடம் செல்வாக்கு செலுத்தக்கூடிய மிக முக்கிய நாடாக பெய்ஜிங் பார்க்கப்படுகிறது.

 

2023 ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தூதரக நல்லுறவு ஒப்பந்தத்திற்கு சீனாவே மத்தியஸ்தம் வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin