ஶ்ரீ.ல.மு.கா. பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் வாசித் எம்.பி இராஜினாமா!

ஶ்ரீ.ல.மு.கா. பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் வாசித் எம்.பி இராஜினாமா!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

 

தனது இராஜினாமாக் கடிதத்தை அவர் தன்னிடம் கையளித்துள்ளதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

 

எம்.எஸ். அப்துல் வாசித் வழங்கிய கடிதத்தின்படி, இந்த இராஜினாமாவானது 2026 செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் அமலுக்கு வருவதாகவும் பதில் செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

 

இதற்கமைய, 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) ஆம் பிரிவுக்கு அமைவாக, பத்தாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினர் பதவி வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin