நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த பயணிகள் கப்பல் – 76 பேர் உயிரிழப்பு.!
செப்டம்பர் 9 பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து கோரோன் (Coron) தீவை நோக்கிச் 132 பேருடன் சென்ற ‘MV June Aster’ என்ற பயணிகள் கப்பலில் திடீரென அடுத்தடுத்து பயங்கர வெடிப்புச் சத்தங்கள் கேட்டுத் தீப்பற்றி எரிந்தது.
மீட்புக் குழுவினர் கப்பலில் இருந்து 76 பேரின் உ**டல்களை மீட்டுள்ளனர். 12 பேர் இன்னமும் காணாமல் போயுள்ளனர்.
இதுவரை மீட்புக் குழுவினர் 43 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.
விபத்து நடந்த நேரத்தில் பயணிகளைக் காப்பாற்ற அவசர நடவடிக்கைகளை எடுக்காமல், கேப்டன் மற்றும் சில ஊழியர்கள் உயிருடன் தப்பிச் சென்று தலைமறைவாகினர்.
இது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், 5 நாட்களுக்குப் பிறகு கேப்டன் தானாக முன்வந்து காவல் துறையிடம் சரணடைந்துள்ளார்.
பயணிகள் உயிருக்குப் போராடியபோது கப்பல் பணியாளர்கள் காட்டிய அலட்சியம் மற்றும் விபத்துக்கான காரணம் குறித்துப் பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படையினர் தீவிர விசாரணையைத் முடுக்கிவிட்டுள்ளனர்.

