உக்ரைன் மீது ரஷ்யா தீவிர வான்வழித் தாக்குதல்!!

உக்ரைன் மீது ரஷ்யா தீவிர வான்வழித் தாக்குதல்!!

உக்ரைனின் கெர்சன் (Kherson) துறைமுகப் பகுதி மீது ரஷ்யா மேற்கொண்ட தீவிர வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து,

நகர் முழுவதும் முழுமையான மின்தடை ஏற்பட்டுள்ளது. போலந்து எல்லைக்கு மிக அருகில் பயணிகள் தொடருந்து மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட அடுத்த நாளே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

மேற்படி தொடருந்து பாதையில் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் (Boris Johnson) மற்றும் அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவின் (CIA) முன்னாள் பணிப்பாளர்

 

டேவிட் பெட்ரேயஸ் (David Petraeus) உள்ளிட்ட முக்கிய மேற்கத்திய அரசியல் மற்றும் பாதுகாப்பு பிரமுகர்கள் தனித்தனி தொடருந்துகளில் பயணித்த சில நிமிடங்களிலேயே இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

அதிர்ஷ்டவசமாக அவர்கள் எவ்வித காயங்களுமின்றி பாதுகாப்பாக எல்லையைக் கடந்துள்ளனர்.

 

நேட்டோ எல்லைப் பகுதிக்கு மிக அருகில் ரஷ்யா தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளமை சர்வதேச அரங்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

பின்னணித் தகவல்கள் & உண்மைத்தன்மை சரிபார்ப்பு: போலந்து எல்லைத் தொடருந்து தாக்குதல்:

 

உக்ரைன்–போலந்து எல்லைக்கு சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள யாஹோதின் (Yahodyn) ரயில் நிலையத்தில் பயணிகள் தொடருந்தின் என்ஜின் மீது ரஷ்ய ட்ரோன் தாக்கியதை உக்ரைன் ரயில்வே நிர்வாகம் மற்றும் சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

 

முன்னெச்சரிக்கையாக பயணிகள் வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

 

போரிஸ் ஜோன்சன் மற்றும் கார்ல் பில்ட் பயணித்த ராஜதந்திர தொடருந்து சில நிமிடங்களுக்கு முன்னரே அங்கிருந்து புறப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

கெர்சன் மின்தடை: கெர்சன் நகரின் துறைமுகம் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது ரஷ்யா முன்னெடுத்த தாக்குதல்களை அடுத்து நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக உக்ரைனிய அதிகாரிகள் மற்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: admin