இந்தோனேசியாவில் 243 பேருடன் சென்ற பயணிகள் கப்பல் விபத்து!!

இந்தோனேசியாவில் 243 பேருடன் சென்ற பயணிகள் கப்பல் விபத்து!!

6 பேர் உயிரிழப்பு – கடலில் மூழ்கிய 129 பேரைத் தேடும் பணிகள் தீவிரம்!

இந்தோனேசியாவில் 243 பயணிகளுடன் கடலில் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் கப்பலொன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 129 பேர் கடலில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற கடல் பிராந்தியத்தில் அந்நாட்டு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப் பிரிவினர் தீவிர மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கப்பலில் பணியாளர்கள் உட்பட மொத்தம் 243 பேர் பயணித்த நிலையில் இக் கோர விபத்து சம்பவித்துள்ளது. இவ் விபத்தில் இதுவரை 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கடலில் மூழ்கிக் காணாமல் போயுள்ள 129 பயணிகளைக் கண்டறியும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

கடற்படை மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் ஹெலிகொப்டர்கள் மற்றும் மீட்புப் படகுகளின் உதவியுடன் தேடுதல் பணிகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin