ஈராக் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!

மத்திய கிழக்கு மோதல்: ஈராக் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.

செவ்வாய்க்கிழமை அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக, நள்ளிரவில் வளைகுடாப் பிராந்தியத்திலுள்ள அமெரிக்கப் படைத்தளங்களைக் குறிவைத்து ஈரான் பாரிய தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.

 

ஈராக் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்

 

ஈராக்கின் ‘எர்பில்’ (Erbil) நகரில் அமைந்துள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஆளில்லா வானூர்திகள் (Drones) மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானியப் புரட்சிகரக் காவற்படையினர் அறிவித்துள்ளனர்.

 

அமெரிக்கப் படையினரின் பராமரிப்பு நிலையங்கள், தொழில்நுட்ப உபகரணக் கிடங்குகள் மற்றும் கண்காணிப்பு பலூன்கள் (Aérostat de surveillance) ஆகியன இங்கு இலக்கு வைக்கப்பட்டன.

 

அதேவேளை, பஹ்ரைனில் (Bahreïn) அமைந்துள்ள ‘ஷேக் ஈசா’ (Sheikh Isa) அமெரிக்க விமானப்படைத் தளத்தின் ராடார் (Radar) வசதிகள் மற்றும் படையினர் கூடும் இடங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

 

இதனால் பஹ்ரைன் முழுவதும் அபாய ஒலி எழுப்பப்பட்டதுடன், மக்களைப் பதற்றமடையாமல் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அந்நாட்டு உள்நாட்டு அமைச்சு அறிவுறுத்தியது.

 

அமெரிக்காவின் குண்டுவீச்சும் ஈரானில் உயிரிழப்புகளும்

 

ஈரானின் இராணுவ உட்கட்டமைப்புகள், வான் பாதுகாப்புத் தளங்கள், ராடார் அமைப்புகள் மற்றும் கடற்படை வசதிகள் மீது தாம் முன்னெடுத்த தாக்குதல்கள் நிறைவடைந்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப்பகம் (Centcom) அறிவித்துள்ளது.

 

இந்த அமெரிக்கக் குண்டுவீச்சுத் தாக்குதல்களில் ஈரானில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது.

 

தென்கிழக்கிலுள்ள குஸெஸ்தான் (Khouzestan) மாகாணத்தில் ஏவுகணைத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், ஹொர்மோஸ்கான் (Hormozgan) மாகாணத்தின்

 

குஹெஸ்டாக் (Kuhestak) நகரில் திருமண நிகழ்வொன்றில் பங்கேற்ற 4 பேர் குண்டுவீச்சில் பலியாகியுள்ளனர்.

 

ஜோர்தான் மற்றும் குவைத்தின் வான் பாதுகாப்பு நடவடிக்கைகள்

 

ஈரானிலிருந்து ஏவப்பட்டுத் தமது வான்பரப்பிற்குள் நுழைந்த 13 பாலிஸ்டிக் ஏவுகணைகளில் 10 ஏவுகணைகளைத் தமது வான் பாதுகாப்புப் படையினர் வழிமறித்து அழித்துள்ளதாக ஜோர்தான் (Jordanie) இராணுவம் தெரிவித்துள்ளது.

 

எஞ்சிய 3 ஏவுகணைகள் மக்கள் நடமாட்டமற்ற தொலைதூரப் பகுதிகளில் வீழ்ந்துள்ளதால் எவ்விதப் பாதிப்புகளும் ஏற்படவில்லை.

 

குவைத் (Koweït) மீதும் ஆளில்லா வானூர்திகள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றைத் தமது வான் பாதுகாப்புத் தொகுதிகள் எதிர்கொண்டு வருவதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

 

மேலும், குடியிருப்புக் கட்டடத் தொகுதியொன்றின் மீது ஈரானிய ஆளில்லா வானூர்தி தாக்கியதில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் குவைத் அறிவித்துள்ளது.

 

தாய்லாந்தை வந்தடைந்த அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்

 

இதற்கிடையில், கப்பலில் நிலவும் வாழ்விடச் சூழல்கள் காரணமாகப் பல்வேறு அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த அமெரிக்காவின் ‘யு.எஸ்.எஸ் ஆபிரகாம்

 

லிங்கன்’ (USS Abraham Lincoln) விமானம் தாங்கிக் கப்பல், பல மாதங்களாகக் கடலில் நிலைகொண்டிருந்த பின்னர் தாய்லாந்துத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin