பாரிஸ் அருகே 6 பில்லியன் யூரோவில் 3 பிரமாண்ட பொழுதுபோக்கு பூங்காக்கள்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், பாரிஸுக்கு வடமேற்கே உள்ள Cergy-Pontoise பகுதியில் சவுதி அரேபியாவின் முதலீட்டில் மூன்று மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்திற்காக சவுதி அரேபியா சுமார் 6 பில்லியன் யூரோ முதலீடு செய்ய உள்ளது. சுமார் 22,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம், பிரான்ஸில் Disneyland Paris-க்குப் பின்னர் இடம்பெறும் மிகப்பெரிய பொழுதுபோக்கு முதலீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
மூன்று பூங்காக்களில் ஒன்றில் பிரபல ஜப்பானிய Dragon Ball Z மங்கா மற்றும் அனிமே உலகை மையமாகக் கொண்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு பூங்காக்களின் கருப்பொருள்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்தப் பூங்காக்கள் முன்னாள் Mirapolis பொழுதுபோக்கு பூங்கா அமைந்திருந்த பகுதியில், பாரிஸிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உருவாக்கப்பட உள்ளன. கட்டுமானப் பணிகள் முடிய நீண்டகாலம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

