பிரெஞ்சு அதிபர் தேர்தல் களம்!!

பிரெஞ்சு அதிபர் தேர்தல் களம்!!

8 மாதங்களுக்கு முன்பே வியூகங்களை வகுக்கும் இடதுசாரிக் கட்சிகள்!

பிரெஞ்சு அதிபர் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலையில், இடதுசாரி அரசியலின் (Gauche) மையமாகத் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள

 

அனைத்துக் கட்சிகளும் மும்முரம் காட்டி வருகின்றன. ‘அடிபணியாப் பிரான்சு’ (La France Insoumise – LFI), சூழலியல்வாதிகள் (Écologistes), சோசலிஸ்டுகள் (Socialistes) என அனைத்துத் தரப்பினரும்

 

கோடைகால அரசியல் கூட்டங்களைத் (Universités d’été) தொடங்கியுள்ளதால் தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

 

மெலோன்சோனின் வியூகமும் சூழலியல்வாதிகளுக்கான அழைப்பும்

 

ட்ரோம் (Drôme) மாவட்டத்தின் சத்தோநெவ் -சுர்-இசெர் (Châteauneuf-sur-Isère) பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அடிபணிய பிரான்ஸ் (LFI) கட்சியின்

 

கோடைகாலக் கூட்டத்தில் (Université d’été) சுமார் 10,000 தொண்டர்கள் பங்கேற்றனர். அங்கு உரையாற்றிய மெலோன்சோன், சூழலியல் திட்டமிடல் குறித்துப் பேசியதோடு, சூழலியல்வாதிகளைத் (Ecologistes) தன்பக்கம் ஈர்க்கும் வகையிலும் அழைப்பு விடுத்தார்.

 

“வெற்றி சாத்தியமே” எனத் தொண்டர்கள் மத்தியில் முழங்கிய அவர், தனது இடதுசாரிப் போட்டியாளர்களைப் பற்றிக் குறிப்பிடாமல், வலதுசாரிகளுடனான நேரடிப் போட்டிக்கே முக்கியத்துவம் அளித்தார்.

 

இதேவேளை நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று, ‘பிளேஸ் பப்ளிக் (Place publique – PP) கட்சியின் இணைத் தலைவரான ரஃபேல் க்ளக்ஸ்மேன், TF1 தொலைக்காட்சியின்

 

இரவு 8 மணிச் செய்தியில் (20 heures) தனது வேட்புமனுவை (Candidature) அதிகாரப்பூர்வமாக அறிவித்து இடதுசாரி அரசியலில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

பிளவுபடும் இடதுசாரிகளும் தொண்டலியரின் அச்சமும்

 

கிரெனோபில் (Grenoble) நகரில் கூடிய சூழலியல்வாதிகளின் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தேசியச் செயலாளர் மரின் தொண்டலியர் (Marine Tondelier), இடதுசாரிகள் ஒன்றிணைய முடியாத இந்தச் சூழலைக் கண்டு கவலையடைந்துள்ளார்.

 

இதற்கிடையே, முன்னாள் அதிபர் பிரான்சுவா ஒலாந்த் (François Hollande) வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி தனது புதிய புத்தகத்தை வெளியிட்டு மீண்டும் அரசியல் களத்தில் நுழையத் திட்டமிட்டுள்ளார்.

 

தீவிர வலதுசாரி ‘தேசியப் பேரணி’ (RN) கட்சி அரசியல் களத்தில் வலுவாக நிலைபெற்றுள்ள சூழலில், இடதுசாரிகளின் இந்தப் பிளவுகள் இரண்டாம் சுற்றை (Second tour) எட்டுவதற்கான அவர்களின் வாய்ப்பைப் பாதிக்குமா என ‘ஒற்றுமைவாதிகள்’ (Unionistes) கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

எனினும், இதுகுறித்துக் கவலையடையாத மெலோன்சோன், “வேட்பாளர்களின் எண்ணிக்கை முக்கியமல்ல; வாக்காளர்களின் எண்ணிக்கையே முக்கியம்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்

Recommended For You

About the Author: admin