வயல் வெட்டி ஒரு மாதம் கூட ஆகவில்லை, அதற்குள் தீ வைத்து விட்டார்கள்…
இந்த புகைப்படத்தை பாருங்கள். ஒரு பக்கம் பசி தாங்க முடியாமல் காய்ந்த வைக்கோலையும் புல்லையும் மேய்ந்து கொண்டிருக்கும் ஒரு வாயில்லா மாடு. மறுபக்கம் கருகி புகைந்து கொண்டிருக்கும் வயல்!
இது வெறும் வைக்கோல் எரிப்பு அல்ல. இது எத்தனையோ உயிர்களின் உணவை எரிப்பது.
யோசித்து பாருங்கள்🫵
இந்த வைக்கோல் தான் மாடு, புல் ஆடுகளுக்கு அடுத்த போகம் வரும் வரை உணவு.
இதில் உதிர்ந்து கிடக்கும் நெல்மணிகள் தான் குருவி, கொக்கு, காடை போன்ற பறவைகளுக்கு உணவு.
இந்த தாள்களுக்கு அடியில் தான் பூச்சி, புழு, பாம்பு, எலி என சின்ன சின்ன ஜீவன்கள் வாழ்கின்றன.
ஒரு தீக்குச்சியில் அத்தனையும் கொன்று விடுகிறீர்களே?
வைக்கோலை எரிப்பதால் மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் செத்துவிடும். மண் வளம் போய்விடும். அடுத்த விவசாயத்திற்கு மீண்டும் மூட்டை மூட்டையாய் உரம் கொட்ட வேண்டும். இது நமக்கு நாமே செய்யும் துரோகம்.
சோம்பேறித்தனத்திற்காக, டிராக்டருக்கு காசு மிச்சம் பிடிக்க, இப்படி வயலுக்கு தீ வைக்கும் ஒரு சில விவசாயிகளே…
இந்த வாய் பேசா ஜீவன்களின் வயிற்றில் அடிக்கிறீர்களே, எப்படி உங்களுக்கு இறைவன் துணை இருப்பார்? இயற்கை எப்படி உங்களுக்கு நல்ல விளைச்சலை கொடுக்கும்?
வைக்கோலை எரிக்காதீர்கள். மாடுகளுக்கு கொடுங்கள். மண்ணுக்கே உரமாக்குங்கள். வாயில்லா உயிர்களை வாழ விடுங்கள்.

