“இனி Windows வேண்டாம்!”
அமெரிக்காவின் Microsoft நிறுவனத்திற்கு சீனா கொடுத்துள்ள இந்த அதிரடி முடிவு,
தற்போது உலகளவில் கவனம் பெற்றுள்ளது!
அமெரிக்கா–சீனா இடையிலான தொழில்நுட்பப் போட்டி தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில்,
அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் கணினிகளில் Windows-க்கு பதிலாக உள்நாட்டு
, Linux அடிப்படையிலான operating system-களை பயன்படுத்துமாறு சீனா அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்குப் பின்னால் முக்கிய காரணமாக பார்க்கப்படுவது டேட்டா பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களைச் சார்ந்திருப்பதை குறைப்பது என்பதாகும்.
சீனாவில் ஏற்கனவே பாதுகாப்புத் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட Windows 10 பதிப்பு பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிலிருந்தும் விலகும் முயற்சி வேகமெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் முக்கியமான கேள்வி என்னவென்றால்…
இது வெறும் தொழில்நுட்ப மாற்றமா? அல்லது அமெரிக்க தொழில்நுட்ப ஆதிக்கத்திற்கு சீனா கொடுக்கும் நேரடி பதிலடியா?
இந்த விவகாரத்தின் பின்னணி மற்றும் சீனாவின் அடுத்த நகர்வு என்ன என்பதை தொடர்ந்து எங்களுடன் தெரிந்துகொள்ளுங்கள்!

