ஈரான் யுத்தத்தில் அமெரிக்காவின் கால் பங்கு “ரீப்பர்” ட்ரோன்கள் அழிவு !!

ஈரான் யுத்தத்தில் அமெரிக்காவின் கால் பங்கு “ரீப்பர்” ட்ரோன்கள் அழிவு !!

1.3 பில்லியன் டொலர் இழப்பு!

ஈரானுடனான தொடர் மோதலில் அமெரிக்க இராணுவம் தனது MQ-9 “ரீப்பர்” ஆளில்லா தாக்குதல்
விமானங்களில் (Drones) கணிசமான எண்ணிக்கையிலானவற்றை இழந்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை வெளியிட்ட சிறப்பு அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

இது தொடர்பில் நேரடியாக அறியக்கூடிய மூன்று அமெரிக்க அரச அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியான அந்த அறிக்கையின்படி,

குறைந்தது 45 MQ-9 ரீப்பர் ட்ரோன்கள் இதுவரை அழிக்கப்பட்டுள்ளன அல்லது இழக்கப்பட்டுள்ளன.
இது யுத்தத்திற்கு முன்னர் அமெரிக்கா வைத்திருந்த மொத்த ரீப்பர் ட்ரோன் படையணியில் தோராயமாக 25 வீதத்திற்கு சமமானதாகும்.

பெப்ரவரி 28ஆம் திகதி ஈரானுடனான மோதல் ஆரம்பமான போது, அமெரிக்க வான்படை மற்றும் கடற்படை
காலாட்படையினரிடம் (Marine Corps) மொத்தமாக 185 ரீப்பர் ட்ரோன்கள் காணப்பட்டதாகவும், இதில் 165 வான்படையினரிடமும்,

20 கடற்படை காலாட்படையினரிடமும் இருந்ததாகவும் அறிக்கை குறிப்பிடுகின்றது. இந்த எண்ணிக்கையில் அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான ட்ரோன்கள் உள்ளடக்கப்படவில்லை.

இழக்கப்பட்ட ட்ரோன்களனைத்தும் நேரடியான தாக்குதல்களால் மாத்திரம் அழிக்கப்படவில்லை என்றும்,
சில ட்ரோன்கள் இயக்குனர்களுடனான தொடர்பு (Communication link) துண்டிக்கப்பட்டதன் காரணமாக விபத்துக்குள்ளாகி வீழ்ந்துள்ளதாகவும் நான்காவது அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையில் அதிக இழப்பு!

இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அதிகளவில் இயக்கப்பட்ட இந்த ட்ரோன்கள், குறைந்த வேகத்திலும்

தாழ்வான உயரத்திலும் பறக்கும் தன்மை காரணமாக ஈரானின் இராணுவத்திற்கும், அப்பிராந்தியத்தில் அதனுடன் தொடர்புடைய குழுக்களுக்கும் எளிதான இலக்குகளாக அமைந்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
கடற்படை காலாட்படையினரின் பேச்சாளர் லெப். கேணல் ஜோஷுவா பென்சன் தெரிவிக்கையில், ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் முதன்மையாக

இயக்கப்படும் தமது படையணியின் எந்தவொரு ரீப்பர் ட்ரோனும் இதுவரை இழக்கப்படவில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, ஏற்பட்ட முழு இழப்பையும் வான்படையே சுமந்துள்ளது.

கடந்த மே மாதம், மூத்த வான்படை அதிகாரி லெப். ஜெனரல் டேவிட் டேபோர், எஞ்சியிருக்கும் ரீப்பர் ட்ரோன்களின் எண்ணிக்கை சுமார் 135ஆக குறைந்துவிட்டதாக அமெரிக்க செனட் சபையில் தெரிவித்திருந்தமையும்,
இந்த இழப்புகள் தொடர்பில் தான் “கவலை” கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிதி இழப்பு 1.3 பில்லியன் டொலருக்கு மேல் பொருத்தப்பட்டுள்ள சென்சார் மற்றும் ஆயுத அமைப்புகளைப் பொறுத்து,

ஒவ்வொரு MQ-9 ரீப்பர் ட்ரோனும் 30 மில்லியன் டொலர் முதல் 50 மில்லியன் டொலர் வரை செலவாகும்
என வான்படை தெரிவிக்கின்றது.

இதன் அடிப்படையில், இதுவரை ஏற்பட்டுள்ள ட்ரோன் இழப்பினால் அமெரிக்க வரிச்செலுத்துனர்களுக்கு 1.3 பில்லியன் டொலருக்கும் அதிகமான நிதிச்சுமை ஏற்படக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு அமெரிக்க வான்படையில் இணைக்கப்பட்ட MQ-9 ரீப்பர், உளவுத் தகவல் சேகரிப்பு மற்றும் இலக்கு தாக்குதல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் முக்கிய ஆளில்லா விமானமாகும்

Recommended For You

About the Author: admin