இலங்கையர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்குவதை 22 வீதமாக குறைத்துள்ளது !

2005-இல், பிரான்சில் அகதிகளுக்கான தேசிய நீதிமன்றம் (CNDA) இலங்கையர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்குவதை 22 வீதமாக குறைத்துள்ளது !

பிரான்சின் ,அகதிகளுக்கான தேசிய நீதிமன்றத்தின் (Cour nationale du droit d’asile – CNDA) தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் மொத்தம் 2,197 இலங்கையர்கள் தங்களது அரசியல் தஞ்சம் கோரிக்கை மனுவை OFPRA நிராகரித்ததற்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தனர் . கடும் பரிசீலனைகளுக்குப் பிறகு, இவர்களில் 486 பேருக்கு மட்டுமே பிரெஞ்சு மண்ணில் பாதுகாப்பாகத் தங்கும் சட்டப்பூர்வ உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த விண்ணப்பதாரர்களில் வெறும் 22 விழுக்காடு (Taux d’accord) மட்டுமே ஆகும்.

 

வெற்றிகரமாகத் தஞ்சம் பெற்ற 486 பேரில், 389 பேருக்கு ஜெனிவா ஒப்பந்தத்தின் கீழான ‘முழுமையான அகதி அந்தஸ்து’ (Statut de réfugié) வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 97 பேருக்கு ‘துணைப் பாதுகாப்பு’ எனப்படும் தற்காலிக அடைக்கலம் (Protection subsidiaire) அளிக்கப்பட்டுள்ளது.

 

விண்ணப்பித்தவர்களில் ஆண்களின் எண்ணிக்கையே பெருமளவில் ஆதிக்கம் செலுத்திய போதிலும், தஞ்சம் பெறுவதில் பெண்களின் வெற்றி விகிதமே கணிசமாக உயர்ந்து நிற்கிறது. தரவுகளைப் பிரித்து ஆராயும்போது தஞ்சம் கோரிய 466 பெண்களில், 160 பேருக்கு அடைக்கலம் கிடைத்துள்ளது. (இதில் 93 பேருக்கு முழுமையான அகதி அந்தஸ்தும், 67 பேருக்குத் துணைப் பாதுகாப்பும் கிடைத்துள்ளது). அதாவது, விண்ணப்பித்த பெண்களில் 34 விழுக்காட்டினருக்குப் பிரான்சு அரசாங்கம் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.

 

மறுபுறம், பெருந்திரளாக 1,731 ஆண்கள் தஞ்சம்(மேல் முறையீடு ) கோரியிருந்தனர். ஆனால், இவர்களில் 326 பேருக்கு மட்டுமே (296 முழுமையான அகதிகள் மற்றும் 30 துணைப் பாதுகாப்பு) சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது. இதன் வெற்றி விகிதம் வெறும் 19 விழுக்காடு மட்டுமே!

Recommended For You

About the Author: admin