கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 200 மில்லியன் போதைப்பொருளுடன் கனேடியர் கைது!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 201.89 மில்லியன் ரூபா பெறுமதியான ‘ஹாஷிஷ்’ போதைப்பொருளுடன் 27 வயதுடைய கனேடியப் பிரஜை ஒருவர் இலங்கை சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டொராண்டோவிலிருந்து தோஹா வழியாகக் கட்டார் எயார்வேஸ் (QR662) விமானத்தில் வந்திறங்கிய ஓவியரான சந்தேகநபரின் இரண்டு பயணப் பொதிகளைச் சோதனையிட்டபோது, அவற்றுள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 80 பொதிகளிலிருந்து 20.117 கிலோகிராம் ஹாஷிஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

