செல்சியா அணியில் இணைந்தார் எமிலியானோ மார்டினேஸ்

செல்சியா அணியில் இணைந்தார் எமிலியானோ மார்டினேஸ்: 3 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து!

அர்ஜென்டினா அணியின் உலகக் கிண்ண வெற்றி அணியில் பங்கேற்ற கோல் காப்பாளர் எமிலியானோ மார்டினேஸ் ஆஸ்டன் வில்லா அணியிலிருந்து விலகி செல்சியா அணியில் இணைந்துள்ளார்.

33 வயதான மார்டினேஸ் செல்சியா அணியுடன் 3 ஆண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

 

இதன் மதிப்பு சுமார் 7.5 மில்லியன் பவுண்டுகள் அதாவது 10 மில்லியன் டொலர்களாகும்.

 

முன்னர் ஆர்சனல் அணியில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய மார்டினேஸ் கடந்த 2020 முதல் ஆஸ்டன் வில்லா அணிக்காக விளையாடி 250-க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

 

இந்தநிலையில் செல்சியா அணியின் கோல் காப்பாளர் நிலையில் நீண்ட காலமாக இருந்த சிக்கல்களுக்கு மார்டினேஸின் வருகை ஒரு நல்ல தீர்வாக அமையும் என்று அணியின் புதிய பயிற்சியாளரான சாபி அலாசோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin