சீனாவின் உயரிய கௌரவம் பெற்ற இலங்கையர்

சீனாவின் உயரிய கௌரவம் பெற்ற இலங்கையர் – வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கீகாரம்!

இலங்கை – சீன சமூக மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு சங்கத்தின் தலைவர் இந்திரானந்த அபேசேகர அவர்கள், வெளிநாடுகளுடனான நட்புறவிற்கான யுன்னான் மக்கள் சங்கத்தின் முதல் கவுன்சிலின் கௌரவ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

சீனாவின் யுன்னான் மாகாணத்திலும், YNPAFFC அமைப்பிலும் நீண்டகாலமாகச் செயல்பட்டு வரும் இந்திரானந்த அபேசேகர, 1987 ஆம் ஆண்டு முதன்முதலில் அந்த மாகாணத்திற்குச் சென்றதிலிருந்தே அவருடனான நட்புறவைப் பேணி வருகிறார்.

 

அன்று முதல் இதுவரை அவர் 20 முறைக்கும் மேலாக யுன்னான் மாகாணத்திற்குப் பயணம் மேற்கொண்டு, இரு தரப்பு உறவுகளை மிகவும் வலுப்படுத்தியுள்ளார்.

 

இந்த கௌரவ உறுப்பினர் பதவிக்கான அதிகாரப்பூர்வமான நிகழ்வு கடந்த ஜூலை 12 ஆம் திகதி குன்மிங் நகரில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில், YNPAFFC அமைப்பின் செயலாளர் நாயகம் காவ் ஷிசின் (Cao Zhiqin) அவர்கள், இந்திரானந்த அபேசேகரவிற்கு கௌரவ கவுன்சில் உறுப்பினர் சான்றிதழையும், அமைப்பின் கௌரவமிக்க தங்கப் பதக்கத்தையும் வழங்கி கௌரவித்தார்.

 

இந்த உயரிய கவுன்சில் பதவிக்கு ஒரு வெளிநாட்டவரைத் தேர்ந்தெடுத்தது, YNPAFFC அமைப்பின் வரலாற்றிலேயே இதுவே முதல்முறை என்று காவ் ஷிசின் அவர்கள் இதன்போது குறிப்பிட்டுக் கூறினார்.

Recommended For You

About the Author: admin