ஓ கஸ்ட் 1 முதல் பிரான்சில் (France) மின் கட்டணம் உயர்வு: மக்களின் தலையில் விழும் கூடுதல் சுமை!

பிரான்சில் உள்ள நுகர்வோர்களுக்கு ஒரு கசப்பான செய்தி! எதிர்வரும் ஓகஸ்ட் 1-ஆம் திக தி முதல், நெறிப்படுத்தப்பட்ட மின்சாரக் கட்டணங்களில் (Tarifs réglementés de l’électricité) சராசரியாக 2.5 விழுக்காடு உயர்வை அமல்படுத்தப் பிரெஞ்சு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக முடிவெடுத்துள்ளது.

‘ஆற்றல் ஒழுங்குமுறை ஆணையத்தின்’ (Commission de régulation de l’énergie – CRE) அதிகாரப்பூர்வப் பரிந்துரையை ஏற்றே அரசாங்கம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இந்த 2.5 விழுக்காடு விலை ஏற்றத்தால், சுமார் 19 மில்லியனுக்கும் மேலான குடியிருப்புகளுக்குக் (Clients résidentiels) கூடுதல் சுமை காத்திருக்கிறது.

அவர்களின் வருடாந்திர மின்கட்டணப் பட்டியலில், அனைத்து வரிகளும் உட்பட (TTC – Toutes taxes comprises) சராசரியாக 26 யூரோக்கள் கூடுதல் செலவு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சகம் (Ministère de l’Énergie) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வரவிருக்கும் கடுங்குளிர்காலச் (Saison hivernale) சவால்களை எதிர்கொள்ளவும், மின் உற்பத்தித் திறனைத் தடையின்றித் தக்கவைக்கவும் கூடுதல் முதலீடுகள் தேவைப்படுகின்றன.

மேலும், சமீபத்திய கதிர்வெம்மையலைக் (Épisodes de chaleur extrême) காலங்களில் நாம் தெளிவாக உணர்ந்ததைப்போல, பொது மின்கட்டமைப்புகளின் (Réseaux publics d’électricité) முறையான பராமரிப்புப் பணிகளுக்கும் இந்த விலை உயர்வு மிகவும் இன்றியமையாதது என அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.

மின்சந்தைகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் தன்னாட்சி அமைப்பான ‘சி.ஆர்.இ’ (CRE), பொது மின்கட்டமைப்புப் பயன்பாட்டுக் கட்டணம் (TURPE) அதிகரித்திருப்பதே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் எனத் தனது பரிந்துரையை நியாயப்படுத்தியுள்ளது.

மறுபுறம், இந்த உயர்வு பிரான்சின் தற்போதைய பணவீக்கத்தோடு (Inflation) (கடந்த மே மாத நிலவரப்படி 2.4%) ஒத்துப் போவதாகவும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

“பிரான்சில் மின்சாரப் பயன்பாட்டிற்கு மாறுவது எப்போதுமே லாபகரமானதுதான்; நமது நாடு கார்பன் உமிழ்வற்ற (Décarbonée) மின்சாரத்தையே உற்பத்தி செய்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் (Union européenne) சராசரி கட்டணங்களை விட நமது நாட்டில் மின்கட்டணம் இன்னும் மிகக் குறைவாகவே உள்ளது,” என அமைச்சகம் பெருமிதம் தெரிவித்துள்ளது.

மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் (Moyen-Orient) நிலவும் போர்ச் சூழல் காரணமாக, கடந்த பிப்ரவரி மாதம் முதல் எரிவாயுவின் (Gaz) சராசரி விற்பனை விலை 21 விழுக்காடு வரை கடுமையாக அதிகரித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி, மின் கட்டண உயர்வுக்கான தற்காப்பு வாதத்தை அரசாங்கம் முன்வைத்துள்ளது

Recommended For You

About the Author: admin