யாழ்ப்பாணத்திற்கு பார்சல் சேவையின் மூலம் வாசனை சவர்க்காரத்திற்குள் மறைத்து ஹெரோயின் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரது பார்சலில் இருந்து 7 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
இரகசிய தகவலின் அடிப்படையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸார், வெளிமாவட்டத்திலிருந்து வந்த சந்தேகத்திற்கிடமான பார்சலைப் பெற வந்த நபரை மடக்கிப் பிடித்து சோதனையிட்டபோது போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், பார்சலை அனுப்பிய நபரை அடையாளம் காணும் விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


