அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரும் தொலைபேசி மூலம் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளதுடன், விரைவில் அமெரிக்காவில் நேரில் சந்திக்கவும் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக இஸ்ரேலியப் பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், இரு தலைவர்களின் சந்திப்பு உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும், அந்தச் சந்திப்பு எப்போது நடைபெறும் என்பது குறித்த துல்லியமான திகதி மற்றும் விபரங்கள் எவையும் குறிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

