ஈரானின் மறைந்த உயர் தலைவரின் இறுதி ஊர்வலம் ஆறு நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் மறைந்த உயர் தலைவர் அயதுல்லா அலி கமெய்னியின் இறுதி ஊர்வலம் இன்று முதல் எதிர்வரும் ஆறு நாட்கள் நடைபெறும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலில் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அவர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவரது நினைவாக நடைபெறும் இந்த இறுதி நிகழ்வுகள், ஈரானின் தலைநகர் தெஹ்ரானிலிருந்து ஆரம்பிக்கப்படுகின்றன.

அதனைத் தொடர்ந்து, ஈரானின் கும் நகரம், பின்னர் ஈராகின் நஜஃப் மற்றும் கர்பலா நகரங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

இறுதி அடக்கம் எதிர்வரும் 9 ஆம் திகதி மஷ்ஹத் நகரில் உள்ள இமாம் ரெசா திருத்தலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இறுதி ஊர்வலத்தில் கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அவரின் உடலத்திற்கு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்புடன் பாகிஸ்தான் இராணுவத் தலைவர்ஈரானின் மறைந்த உச்ச தலைவரின் இறுதி ஊர்வலம் ஆறு நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனியின் இறுதி ஊர்வலம் இன்று முதல் எதிர்வரும் ஆறு நாட்கள் நடைபெறும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலில் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அவர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவரது நினைவாக நடைபெறும் இந்த இறுதி நிகழ்வுகள், ஈரானின் தலைநகர் தெஹ்ரானிலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, ஈரானின் கும் நகரம், பின்னர் ஈராகின் நஜஃப் மற்றும் கர்பலா நகரங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

இறுதி அடக்கம் எதிர்வரும் 9 ஆம் திகதி மஷ்ஹத் நகரில் உள்ள இமாம் ரெசா திருத்தலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இறுதி ஊர்வலத்தில் கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அவரிக் உடலத்திற்கு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்புடன் பாகிஸ்தான் இராணுவத் தலைவர் ஆசிம் முனீர் மற்றும் உயர்மட்ட குழுவினரும், இதன்போது கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை இறுதி நிகழ்விற்கு உலகம் முழுவதிலிருந்தும் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதாக ஈரானின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதற்கமைய பாகிஸ்தான், தஜிகிஸ்தான், ஆர்மீனியா மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகளின்; தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் துருக்கி, இந்தியா, சீனா, ரஷ்யா, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் உயர்மட்ட அரசியல் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

Recommended For You

About the Author: admin