அரச நெல் களஞ்சியசாலைகளை உடனடியாகத் திறக்குமாறு விவசாயிகள் கோரிக்கை

நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக அரச நெல் களஞ்சியசாலைகளை உடனடியாகத் திறக்குமாறு விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், தமது நெல்லுக்கு முறையான நியாயமான விலையொன்றைப் பெற்றுத் தருமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிறுபோக நெல்லுக்கான சான்று விலையொன்றை வர்த்தக அமைச்சு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்த போதிலும், அந்த விலை தமக்கு போதுமானதாக இல்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக ஹிங்குராண – பெரனிகம பகுதியில் அமைந்துள்ள அரசாங்க நெல் களஞ்சியசாலை இதுவரை திறக்கப்படவில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Recommended For You

About the Author: admin