2026 ஆம் ஆண்டிற்கான 13 ஆவது அரச அதிபர் வெற்றிக் கிண்ண இறுதிப் போட்டிகள் யாழ். மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தின் தலைவரும், புள்ளிவிபர பிரதிப் பணிப்பாளரும் திரு. எம். வித்தியானந்தநேசன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (04.07.2026) காலை 09.00 மணிக்கு வடமராட்சி கிழக்கு(மருதங்கேணி) பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டுள்ளார்.
நிகழ்வியில் பிரதம விருந்தினர் உள்ளிட்ட விருந்தினர்கள் மருதங்கேணி பிரதேச செயலகத்திலிருந்து உடுத்துறை மகா வித்தியாலய மாணவர்களின் பான்ட் வாத்திய இசையுடன், விளையாட்டு மைதானத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்கள்.
அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தேசிய கொடியினை அரசாங்க அதிபரும், மாவட்டச் செயலக கொடியினை மேலதிக அரசாங்க அதிபரும் பிரதேச செயலகங்களின் கொடிகளை அந்ததந்த பிரதேச செயலாளர்களாலும் ஏற்றப்பட்டன.
மேலும், மதகுருமார்களின் ஆசியுரையினை தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களால் போட்டிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
முதலாவது போட்டியாக யாழ்.மாவட்டச் செயலகத்திற்கும் மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கும் இடையிலான பெண்களுக்கான துடுப்பாட்டப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியினை அரசாங்க அதிபர் ஆரம்பித்து வைத்தார்.
இதில் மருதங்கேணி பிரதேச செயலக அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று துட்டுப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.


